ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து? முக்கிய முடிவு எடுக்கும் பிசிசிஐ.. ராஜீவ் சுக்லா சொன்ன பாய்ண்ட்!
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கியுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளைய ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தரமான பதிலடியை கொடுத்தது. இந்த ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. தரம்சாலாவில் உள்ள வீரர்கள் பாதுகாப்புடன் வெளியேற சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் பயணம் செய்ய உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கி இருப்பதால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூடி விரைவில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா பேசுகையில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக நாளை சூழல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், மக்களை ஒரே இடத்தில் கூட்டுவது சரியானதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்தப்பட்டால், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் நடத்தப்படாது என்றும் பார்க்கப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications