களேபரங்களுக்கு இடையே.. முடிந்த 2ஆம் கட்ட தேர்தல்.. அசாம், மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எவ்வளவு?
டெல்லி: அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் முறையே 77.2%, மற்றும் 82% வாக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. இதனால் இந்த ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் நேற்று 77.2% வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2016ஆம் 82.7% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், அது தற்போது குறைந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 30 தொகுதிகளில் கடந்த 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று இரண்டாம் கட்டமாக 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது

மேற்கு வங்க முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நந்திகிராம் தொகுதியில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் பாஜகவினர் தடுப்பதாக மம்தா பானர்ஜி புகார் அளித்துள்ளார். அதேபோல பதிலுக்கு பாஜகவும் திரிணாமுல் கட்சியினர் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் நேற்று 82.8% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2016ஆம் ஆண்டு பதிவான 87.1% வாக்குகளைவிடக் குறைவாகும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications