மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் மம்தா! Chanakya strategies எக்சிட்போல்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தல் களம் தற்போது 'எக்சிட் போல்' கணக்குகளால் அனல் பறந்து கொண்டிருக்கிறது. அங்குத் தொடக்கம் முதலே வெளியாகும் கருத்துக் கணிப்புகள் மம்தாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகவே இருக்கிறது. இப்போது Chanakya strategies வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிலும் பாஜகவே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி கடுமையாக இருந்தாலும் பாஜகவே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது வரிசையாக பல்வேறு நிறுவனங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இதில் மேற்கு வங்கத்தில் இருந்து வரும் எக்ஸிட்போல் முடிவுகள் உண்மையில் மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது.

Exit Poll Results Exit Poll Results 2026 West Bengal election 2026 Mamata Banerjee BJP 2026

எக்சிட் போல் சர்வே

இப்போது 'சாணக்யா ஸ்ட்ரேட்டஜிஸ்' (Chanakya Strategies) தனது எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.. மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுக்கால அரசியல் சாம்ராஜ்யத்திற்கு பாஜக மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதை இந்தக் கணிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

மேற்கு வங்கத்தின் 294 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தல் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த கையோடு வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள், பாஜகவுக்குச் சாதகமாகவே இருக்கிறது.. 'சாணக்யா ஸ்ட்ரேட்டஜிஸ்' வெளியிட்டுள்ள முடிவுகள் 'தீதி' மம்தா பானர்ஜிக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

வெல்ல போவது யார்

அங்கு ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 148 என்ற மேஜிக் எண்ணை பாஜக தொட்டுவிடும் என்றே Chanakya Strategies தெரிவித்துள்ளது.

  • பாஜக - 150 - 160 இடங்கள்
  • திரிணாமுல் காங்கிரஸ் - 130 - 140 இடங்கள்
  • இதர கட்சிகள்- 06 - 10 இடங்கள்

இந்தக் கணிப்பின்படி பார்த்தால், பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருந்த போதிலும் மேற்கு வங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதே சமயம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு இடத்தைக் கூடப் பிடிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்

"மேற்கு வங்கத்தில் நிலவும் 15 ஆண்டுக்கால ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி, இந்த முறை பாஜகவிற்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களுக்குப் பிறகு பாஜக கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, த்ரிணாமுல் காங்கிரஸ் 130 முதல் 140 இடங்களுக்குள் சுருங்கும் சூழல் உருவாகியுள்ளது.

எந்த ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளால் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை. அவர்களின் வாக்கு வங்கி முழுவதும் பாஜக மற்றும் திரிணாமுல் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே பிரிந்துவிட்டது.

மேற்கு வங்கம்

மம்தா பானர்ஜியின் அசைக்க முடியாத அரசியல் ஆளுமைக்கு இந்த முறை பாஜக கடுமையான சவாலை உருவாக்கியுள்ளது. பி-மார்க் (P-MARQ) மற்றும் மேட்ரைஸ் (Matrize) போன்ற நிறுவனங்களும் பாஜகவிற்கு ஆதரவான முடிவுகளையே கொடுத்துள்ள நிலையில், சாணக்யாவின் இந்தக் கணிப்பு ஆட்சி மாற்றம் கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+