‛பத்மஸ்ரீ விருது வேண்டாம்’.. மோடியிடம் திரும்ப ஒப்படைக்கும் வீரேந்தர் சிங்! யார் இவர்? பின்னணி
டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக பரபரப்பாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஓய்வை அறிவித்த நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ள நிலையில் வீரேந்தர் சிங் இந்த அறிவிப்பை செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் பாஜகவின் எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் தான்.

அதாவது பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிய தலைவராக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இதனால் வீரர், வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஓய்வை அறிவித்ததார். கண்ணீர் மல்க அவர் இந்த முடிவை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் வீட்டு வாசலில் நேற்று அவர் பத்மஸ்ரீ விருதை வைத்துவிட்டு சென்றார்.
இந்த வரிசையில் தற்போது மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் இப்போது இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எனது சகோதரியும், நாட்டின் மகளுமான சாக்ஷி மாலிக்குக்காக எனது பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்கிறேன். பிரதமர் மோடி ஜி, உங்களின் மகளும், எனது சகோதரியுமான சாக்ஷி மாலிக்கை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்த விஷயத்தின் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்கள் தங்களின் முடிவை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications