"பீர், நெட்பிக்ஸ், சிகரெட்கள்.." சாரதாவை 35 துண்டாக வெட்டிய போது.. பயப்படாமல் சில் செய்த கொலையாளி
டெல்லி: தலைநகர் டெல்லியில் சாரதா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதிய பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் டெல்லியில் 26 வயதே ஆன சாரதா என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிருக்கு உயிராகக் காதலித்த அப்தாப் அமீன் என்ற நபர் தான் காதலியைக் கொன்றார்.
மேலும், உடலையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். இந்த கொடூரம் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கச் செய்வதாக உள்ளது.

கொடூரம்
இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், சாரதாவுக்கும் அவரது தந்தைக்கும் சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை இல்லை. இருப்பினும், சாரதாவின் சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவொரு பதிவும் சில மாதங்களகவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை சாரதாவின் நண்பர்களிடம் விசாரித்த போது தான் அவர் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் தான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொலை
காதலனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்த சாரதா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு உள்ளது. இப்படித்தான் கடந்த மே மாதம் சாரதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க அது, அப்படியே வாக்குவாதமாக முற்றியுள்ளது. அப்போது தான் சாரதாவை அவரது காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

10 மணி நேரம்
சாரதாவை கொலை செய்த பின், ஆதாரங்களை அளிக்க அப்தாப் செய்த செயல்கள் தான் கொடூரத்தின் உச்சம். இதற்கிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்த பின்னர், சாரதாவின் உடலை 35 துண்டுகளாக அப்தாப் வெட்டியுள்ளான். எப்படி உடலை வெட்ட வேண்டும் என்பை கூகுளில் படித்துத் தெரிந்து கொண்ட அவன், உடலைத் துண்டுகளாக வெட்ட சுமார் 10 மணி நேரம் வரை ஆனதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

பீர், சிகரெட்
இடையில் டயர்ட் ஆன போதெல்லாம் பீரை குடித்து ஓய்வெடுத்ததாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். மேலும், இதனால் ஏற்பட்ட ரத்த கறையை முழுமையாகத் துடைக்கப் பல மணி நேரம் ஆனதாகவும் அவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளான். இடையில் பீர் குடித்தும் சிகரெட் புகைத்தும் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டு உள்ளான்.

நெட்பிளிக்ஸ்
சாரதாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி முடித்த பிறகு, எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அப்தாப் உணவு ஆர்டர் செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளான். மேலும், சாரதாவை கொலை செய்து சில மணி நேரத்திலேயே உணவைச் சாப்பிடும், நெட்பிளிக்ஸில் படத்தையும் பார்த்துள்ளான். சாரதாவை கொலை செய்தது குறித்து எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இதையெல்லாம் செய்துள்ளான்.

நீதிமன்றம்
நாட்டையே இந்தச் சம்பவம் உலுக்கி உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அப்தாப் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐந்து நாட்கள் அப்தாபை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். அப்தாபை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications