ஹிரோஷிமா, நாகசாகியை விட மோசமாக இருக்கும்.. அணு ஆயுத போர் வந்தால்.. பாகிஸ்தான் என்ன ஆகும் தெரியுமா?
சென்னை: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் முற்றி உள்ளது. இது அணு ஆயுத போராக மாறும் அபாயங்களும் கூட உள்ளன. அப்படி அணு ஆயுத போர் வெடித்து இந்தியா பாகிஸ்தானை தாக்கினால் பாகிஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்படும்.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீர் முதல் குஜராத் வரை இந்தியாவில் 26 இடங்களில் பாகிஸ்தான் புதிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதை இந்தியா உடனுக்குடன் தடுத்தது.
ஸ்ரீநகர் அருகே 6-7 ட்ரோன்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஸ்ரீநகரில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ பதிவாகவில்லை. பாகிஸ்தான் எல்லையில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினரால் உடனடியாக எதிர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள லாகூரில் இந்தியா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது பாகிஸ்தானின் இருதயம் போன்ற நகரம் ஆகும். அரசியல் தலைநகர் ஆகும். பாகிஸ்தானின் அரசியலை நிர்ணயிப்பதே லாகூர்தான். லாகூரில் ஏவுகணை மூலம் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல ராவல்பிண்டியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதி பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் இருக்கும் பகுதி ஆகும். பாகிஸ்தானின் மிக முக்கிய ராணுவ தளவாடம் ஆகும். இஸ்லாமாபாத்தில் இந்தியா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளது. இது பாகிஸ்தானின் தலைநகர் ஆகும்.

பாகிஸ்தானின் ஃபத்தா-1 ஏவுகணையை தடுத்து நிறுத்தியது இந்தியா பாதுகாப்பு படை. முக்கிய இலக்கை நோக்கிச் சென்ற ஃபத்தா-1 ஏவுகணை தடுத்து அழிக்கப்பட்டது. மேற்குப் பகுதியில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டது.
மோதல் உச்சம்
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் முற்றி உள்ளது. இது அணு ஆயுத போராக மாறும் அபாயங்களும் கூட உள்ளன. அப்படி நடந்தால் பாகிஸ்தானுக்கு பின்வரும் 7 விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும்.
ஹிரோஷிமா நாகசாகியை விட மோசமான சூழல்
அணு ஆயுத போர் வந்தால் அதனால் ஹிரோஷிமா, நாகசாகியை விட மோசமாக சூழல் இருக்கும். அப்போது பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்கள் தொடக்க கால குறைந்த எடை கொண்ட அணு ஆயுதங்கள். இப்போது உள்ளவை அதைவிட அதிக பலம் வாய்ந்தவை. அதிக எடை கொண்டவை, அதுவும் இந்திய அணு ஆயுதங்கள் நவீனமானவை. பாகிஸ்தானில் இன்னும் மோசமான பாதிப்பை தரும்.
அதிக அளவிலான மரணங்கள்
இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் சில மணி நேரங்களுக்குள் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கக்கூடும். கதிர்வீச்சு விளைவு நீண்டகால பாதிப்புகளை, மரணங்களை, சுகாதார நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேலும் எண்ணற்றோருக்கு தீக்காயங்கள், கதிர்வீச்சு நோய் மற்றும் கேன்சர் பாதிப்புகள், இயற்கை வள பாதிப்புகள் ஏற்படும்.
மொத்த உள்கட்டமைப்பு சரிவு
அணுசக்தி தாக்குதல்கள் முக்கிய உள்கட்டமைப்பை காலி செய்யும். மின்சார நெட்வொர்க்குகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, மருத்துவமனைகள் அழிக்கப்படும். ஏற்கனவே மோசமாக உள்ள அமெரிக்காவின் பொருளாதாரங்களையும் அன்றாட செயல்பாட்டையும் முடக்கும். பாகிஸ்தான் மீண்டு வர பல வருடங்கள் ஆகலாம்.
சுற்றுச்சூழல் விளைவு
அணு ஆயுத போர் வளிமண்டலத்தில் கடுமையான கசிவை வெளியேற்றி, தெற்காசியாவிலிருந்து வெகு தொலைவில் கூட பாதிப்பை ஏற்படும். முக்கியமாக உலகளாவிய காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். உணவு உற்பத்தியை சீர்குலைக்கும். பாகிஸ்தான் மீண்டு வர முடியாத நிலை ஏற்படும். ஏனென்றால் அவர்கள் ஜப்பான் போன்ற பொருளாதாரம் கிடையாது.
பாகிஸ்தான் தாக்கம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத திறன்களைக் கொண்டுள்ளன என்றாலும் இந்தியாவின் பலம் கூடுதல். இதனால் பாகிஸ்தானுக்கு சேதம் அதிகம் ஏற்படும். அதோடு பாகிஸ்தானால் இந்திய ரேடாரை கடந்து வந்து இங்கே அணு ஆயுதங்களை வீசவே முடியாது.
உலகளாவிய பொருளாதார சரிவு
அணு ஆயுத போர் உலகளாவிய சந்தைகளை பாதிக்கும். குறிப்பாக ஆசியாவின் பொருளாதாரத்தில் பேரழிவிற்கு வழிவகுக்கும். சர்வதேச உறவுகள் ஆட்டம் காணும், மேலும் உலக சக்திகள் ராஜதந்திர ரீதியாகவோ அல்லது இராணுவ ரீதியாகவோ தலையிட்டு, பெரிய மோதலுக்கு வழிவகுக்கும். அதாவது சீனா, அமெரிக்கா, துருக்கி ரஷ்யா போன்றவை இதில் தலையிடலாம். அதாவது உலகப்போரை கூட உருவாக்கும்.
பீதி ஏற்படும்
பீதி, சட்டமின்மை, அகதிகள் நெருக்கடிகள் மற்றும் பாகிஸ்தானில் அரசாங்க ஆட்சி கவிழ்ப்பு, பாகிஸ்தான் 2-3 துண்டுகளாக உடைதல் எமர்ஜென்சி போன்றவை ஏற்படலாம்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications