"எதிரி கண்ணில் மண்ணை தூவும் ஸ்கார்பீன்!" பிரான்ஸிடம் இருந்து நாம் பெறும் நீர்மூழ்கி கப்பல் இதுதான்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில், ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வாங்குவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்புகள்.. ஏன் இது முக்கியம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்த பயணத்தில் ரபேல் விமானங்கள் மட்டுமின்றி 3 ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய பாதுகாப்புப் படைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியா கடற்படைக்கு இது மிகப் பெரியளவில் ப்ளஸாக அமையும். இந்த , ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏன் முக்கியம், இதில் உள்ள சிறப்புகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஸ்கார்பீன்: இதற்கிடையே பிரான்சிடம் இருந்து இந்தியா ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குகிறது. எதிரிகள் கண்களில் மண் தூவி விட்டு இலக்கை நோக்கி நகரம் ஸ்டெல்த் திறன் பெற்றவையாக இந்த ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவை மிகவும் அமைதியானவையாகும். கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய உதவும் சோனார் சாதனத்திலும் இது சிக்காது. இதனால் எதிரி உணர்வதற்குள் அவர்கள் பகுதிக்கே சென்றுவிட முடியும்.
நீண்ட நேரம் நீரில் மூழ்கிச் செயல்படும் திறன் உள்ளிட்ட பல திறன்கள் இதற்கு இருப்பதால் சோனார் சாதனத்தில் இருந்து இது பக்காவாக எஸ்கேப் ஆகிவிடும். எதிரிகளைச் சுற்றலில் விடுவது மட்டுமின்றி, இந்த ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களில் பல அதிநவீன ஆயுதங்களும் கூட இருக்கும். டார்பிடோக்கள், ஏவுகணைகள் என பல்வேறு ஆயுதங்களையும் இது கொண்டிருக்கிறது. இதனால் பல ஏவுகணைகள், ராக்கெட்கள், குண்டு வீசும் கருவிகளை இது கொண்டிருக்கிறது.
ஏன் முக்கியம்: மேலும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களைப் போல இல்லாமல் இந்த ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை மிக எளிதாக நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தலாம். இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான பகுதி ஆழமற்றதாக இருக்கும் நிலையில், இந்தியக் கடற்படைக்கு இதுபோன்ற ஆழமற்ற நீரில் பயன்படுத்த இது மிகவும் ஏற்றதாக அமையும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் நமது சூழ்நிலைக்கு இப்போது தேவையான மிகவும் திறமையான நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கிறது. இவை இந்தியக் கடற்படைக்கு பலத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. சத்தமே வராமல் அமைதியாகச் செயல்படும் திறன், குறைந்த ஆழத்திலும் செயல்படும் திறன், ஆயுதங்கள் ஆகியவை இந்தியப் பெருங்கடலில் இதை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது. இதில் இருக்கும் சில சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்
குறைந்த சத்தம்: ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்கள் மிகவும் அமைதியானவை. இதனால் சோனார் மூலம் அவற்றைக் கண்டுபிடிப்பதும் ரொம்பவே கடினம்.. நாய்ஸ் கேன்சலிங் தொழில்நுட்பம், கவனமாக வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் மேற்புறம் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகும்.
நீண்ட நேரம் இயங்கும் திறன்: டீசல்-மின்சார உந்துவிசை அமைப்பைக் கொண்டிருக்கும் ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களால், நீண்ட நேரம் வரை நீரில் மூழ்கிச் செயல்பட முடியும். அடிக்கடி மேற்புறத்திற்கு வரத் தேவையில்லை என்பதால், எளிதாக எதிரிகளிடம் இருந்து தப்பிக்க முடியும். எனவே, ரகசிய ஆப்ரேஷன்களுக்கு மிகவும் ஏற்ற நீர்மூழ்கிக் கப்பலாக இது இருக்கிறது.
பல வகை ஆயுதங்களைக் கொண்டிருக்கும் திறன்: முன்பே சொன்னது போல இதில் டார்பிடோக்கள், ஏவுகணைகள், ராக்கெட்கள், மைன்கள் எனப் பல வகை ஆயுதங்களை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல முடியும். இதனால் அனைத்து விதமான மிஷன்களுக்கும் ஏற்றதாக இது இருக்கிறது.
படுவேகமாக நகரும்: இதன் மேம்பட்ட ஹல் வடிவமைப்பு மற்றும் உந்துவிசை அமைப்பு காரணமாக ஆழமற்ற நீரிலும் கூட மிக எளிதாகவும் வேகமாகவும் இதனால் பயணிக்க முடியும்.
இப்படிப் பல திறன்களைக் கொண்ட, இந்தியாவுக்குத் தேவையான சூழலில் செயல்பட ஏதுவான ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களையே இந்தியா பிரான்ஸிடம் இருந்து வாங்குகிறது. இது இந்தியாவின் கடற்படைக்கு நிச்சயம் பெரிய ப்ளஸ்ஸாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications