சீனாவை அலறவிடும் பிஎப்.7 ஓமிக்ரான்! இந்தியாவில் புகுந்தது.. அறிகுறிகள் என்னென்ன! எந்தளவு ஆபத்தானது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா அலை அதிகரிக்கக் காரணமாக உள்ள பிஎப்.7 வகை ஓமிக்ரான் குறித்தும் அதற்கான அறிகுறி, சிகிச்சை முறை உள்ளிட்டவை குறித்து நாம் பார்க்கலாம்.

உலகின் அனைத்து நாடுகளிலுமே இத்தனை காலமாக கொரோனா தொடர்ந்து வந்தது. கொரோனாவை மறந்து பொதுமக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர். கொரோனா முடிந்துவிட்டது என்றே பலரும் நினைத்து வந்தனர்.

இந்தச் சூழலில் தான் இப்போது சீனாவில் மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கிருந்த ஜீரோ கோவிட் பாலிசி உடனடியாக முற்றிலும் நீக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

சீனா

சீனா

சீனாவில் இப்படி திடீரென வைரஸ் பாதிப்பு அதிகரிக்க அங்குப் பரவும் ஓமிக்ரான் வகை கொரோனாவே முக்கிய காரணம். பிரிட்டன், அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது இந்தியாவிலும் கூட இதுவரை குஜராத், ஒடிசா மாநிலங்களில் சிலருக்கு இந்த வகை ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சீனாவையும் ஸ்தம்பிக்க வைக்கும் இந்த கொரோனா மீண்டும் உலகெங்கும் ஒரு அலையை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் அறிகுறி, சிகிச்சை முறை உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம்.

 பிஎப் 7 ஓமிக்ரான்

பிஎப் 7 ஓமிக்ரான்

இந்த பிஎப் 7 வகை புதிய வகை கொரோனா இல்லை. இவை ஏற்கனவே பரவி BA.5 ஓமிக்ரானின் ஒரு உட்பிரிவாகும். இது குறுகிய காலத்திலேயே மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. பொதுவாக கொரோனா ஒருவரைப் பாதித்தால், 5 முதல் 7 நாட்களுக்கு பிறகே பரவ தொடங்கும். ஆனால், இந்த பிஎப் 7 வகை ஓமிக்ரான் அதற்கு முன்பாகவே பரவ ஆரம்பித்துவிடும். மேலும், ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தோர், வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கும் கூட இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சீனாவில் முதலில் உருவான கொரோனாவை காட்டிலும் 4.4 மடங்கு ஆன்டிபாடிகளை தடுக்கும் திறன் கொண்டது.

அறிகுறி

அறிகுறி

அனைத்து கொரோனா வகைகளை போலவே இந்த வகை கொரோனாவும் மேல் சுவாசப் பாதையைத் தாக்கும். காய்ச்சல், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. சில நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. யாருக்காவது இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.. ஓமிக்ரான் பெரும்பாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும், இது மிக வேகமாகப் பரவும் என்பதே இதை ஆபத்தானதாக மாற்றுகிறது.

 முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்துவதாக மாறியுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது, மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்துவதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவில் இப்போது குளிர் காலம் நிலவுகிறது. இந்த காலகட்டத்தில் பொதுவாகவே இந்தியாவில் சளி, இருமல் உள்ளிட்ட பருவகால நோய்கள் ஏற்படும். இருந்த போதிலும் உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைச் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து புறம் தள்ளிவிடக் கூடாது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் நிலைமை சீனா அளவுக்கு மோசமாகவில்லை. இருந்த போதிலும், பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பைப் பலப்படுத்தவும் அனைத்து மாநிலங்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமும் கொரோனா சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மோசமாகுமா

மோசமாகுமா

இருப்பினும், சீனா அளவுக்கு இந்தியாவில் நிலைமை மோசமாகாது என்றே பல்வேறு வல்லுநர்களும் கூறுகின்றனர். மற்ற நாடுகளைப் போல இல்லாமல் சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவிட் கட்டுப்பாடுகள் மூலமே வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது. இதனால், அங்குப் பலருக்கும் கொரோனா தடுப்பாற்றல் இல்லாமல் இருந்த நிலையில், அதுவே வைரஸ் பாதிப்பு இவ்வளவு வேகமாகப் பரவ காரணமாக மாறிவிட்டது. ஆனால், இந்தியாவில் ஏற்கனவே பெரும்பகுதி மக்களுக்கு தடுப்பாற்றல் உள்ளதால் நாம் அந்தளவுக்கு அச்சப்படத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+