டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி 15-18 வயது உள்ளவர்களுக்கு Vaccine.. என்ன வேக்சின் தரப்படும்? எப்படி செலுத்தப்படும்? முழு விபரம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் மருத்துவ கட்டமைப்பு.. பிரதமர் மோடி தகவல்

    நேற்று இரவு நாட்டு மக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் திடீரென அவர் மக்கள் முன் உரையாற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவித்தார்.

    பிரபஞ்சத்தின் தொடக்கத்தை ஆராய புறப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. வெற்றிகரமாக ஏவப்பட்டது- சுவாரசியம்!பிரபஞ்சத்தின் தொடக்கத்தை ஆராய புறப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.. வெற்றிகரமாக ஏவப்பட்டது- சுவாரசியம்!

    இந்த நிலையில்தான் இந்தியாவில் ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    அதேபோல் இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி 3ம் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார். இந்த நிலையில் இந்தியாவில் 2 வகையான வேக்சின்கள் குழந்தைகளுக்கு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக என்று மேல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இரண்டு வகை

    இரண்டு வகை

    முதல் வகை, பெரியவர்கள் பெற்றுக்கொண்ட அதே கோவாக்சின். கோவாக்சின் உருவாக்கப்பட்ட போதே அது சிறியவர்கள், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் பயன்படும் வகையில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இதில் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. இதன் பார்முலா அனைத்து வயதினருக்கும் பொருந்த கூடியது. அதேபோல் 18 வயதுக்கு குறைவானவர்களிடம் சோதனையும் செய்யப்பட்டுவிட்டது.

    சோதனை

    சோதனை

    அவர்களிடம் செய்யப்பட்ட சோதனையில், குழந்தைகளுக்கு கோவாக்சின் போதிய எதிர்ப்பு சக்தியை வழங்கி உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் இந்த கோவாக்சினை 12-18 வயது கொண்டவர்களுக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது. இதனால் கோவாக்சின் இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    ஊசி

    ஊசி

    இது பெரியவர்களுக்கு அளிக்கப்பட்டது போல ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும். இன்னொரு வேக்சினான சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் மூன்று டோஸ் கொரோனா வேக்சினுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஏற்கனவே அவசர அனுமதி கொடுத்துள்ளது. ZyCoV-D என்று அழைக்கப்படும் இந்த வேக்சின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ZyCoV-D வேக்சின்

    ZyCoV-D வேக்சின்

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் டிஎன்ஏ வகை கொரோனா வைரஸ் ஆகும் இது. கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிறுவனம் சைடஸ் கேடில்லா 3 டோஸ் வேக்சினுக்கான கடைசி கட்ட சோதனை முடிவுகளை வெளியிட்டது. கேடில்லா நிறுவனம் தங்களின் சைடஸ் கேடில்லா வேக்சின் 12 முதல் 18 வயது கொண்டவர்களிடமும் செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளது. இதனால் இதுவும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களிடம் பயன்படுத்தப்பட உள்ளது.

    டிஎன்ஏ வேக்சின்

    டிஎன்ஏ வேக்சின்

    அகமதாபாத்தில் உள்ள இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கும் ZyCoV-D டிஎன்ஏ வேக்சின் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் எல்லாம் மிகவும் பாதுகாப்பான முடிவுகளை கொடுத்துள்ளது, பொதுவாகவே டிஎன்ஏ வேக்சின் அதிக பாதுகாப்பு கொண்டது. கொரோனா வைரஸின் ஜீன்கள் பிரதி எடுக்கப்பட்டு அதன் டிஎன்ஏவை வைத்து இந்த வேக்சின்கள் உருவாக்கப்படுகின்றன.

    எப்படி செலுத்தப்படும்

    எப்படி செலுத்தப்படும்

    இதை ஊசி இல்லாமல் needle-free injector மூலம் உடலுக்குள் செலுத்த முடியும். அதாவது ஊசி போன்ற முனை இல்லாமலே இன்ஜெக்டர் மூலம் இதை உடலில் செலுத்த முடியும். காற்று அழுத்தம் மூலம் இது உடலுக்குள் வயிற்று பகுதி அல்லது கை பகுதி வழியாக செலுத்தப்படும். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது அதிக அளவில் செலுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    English summary
    What are the vaccines that will be used for the 15-18 age group in India? All you need to know.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X