ராகுல் காந்தி அதிகம் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் என்ன.. எவ்வளவு லாபம் கொடுத்துள்ளது தெரியுமா
டெல்லி: ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரது பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் அவரது சொத்து மதிப்புகள் உள்ளன.

ராகுல் காந்தி: அதில் அவருக்கு ரூ.9.24 கோடி அசையும் மற்றும் ரூ.11.5 கோடி அசையா சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ராகுல் காந்திக்கு ரூ.4.3 கோடி மதிப்புள்ள பங்குகளும் ரூ.3.81 கோடி மதிப்புள்ள மியூச்சுவல் பண்ட்களிலும் உள்ளன. ராகுல் காந்தி எந்ததெந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். கேரளாவில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறுகிறது. அங்கே போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அத்துடன் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் சொத்து மதிப்பு மற்றும் வேட்பாளர் மீதான நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்று இருந்தன.
எந்த நிறுவனத்தில் அதிக முதலீடு: சரி விஷயத்திற்கு வருவோம்.. ராகுல் காந்தி அதிகம் வைத்திருக்கும் பங்குகள் என்ன எனப் பார்க்கலாம். ராகுல் காந்தி அதிகபட்சமாக வைத்திருக்கும் பங்கு பெரிய நிறுவனம் இல்லை.. அது ஸ்மால் கேப்பில் உள்ள சுப்ரஜித் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் பங்குகளைத் தான் அவர் அதிகம் வைத்துள்ளார். அதன் பிறகு ஐடிசி மற்றும் ஐசிஐசிஐ வங்கி அவரிடம் அதிகம் இருக்கிறது.
சுமார் 16.65 லட்சம் மதிப்பிலான சுப்ரஜித் இன்ஜினியரிங் பங்குகளை அவர் வைத்ததுள்ளார். இந்த பங்கு கடந்த 12 மாதங்களில் சுமார் 20% வருமானத்தை அளித்துள்ளது. அதன் பிறகு ரூ.12.96 லட்சம் மதிப்பிலான ஐடிசி பங்குகளும் ரூ.24.83 லட்சம் மதிப்பிலான ஐசிஐசிஐ வங்கி பங்குகளும் அவரிடம் இருக்கிறது. சுப்ரஜித் இன்ஜினியரிங் பங்குள் அதிகம் வைத்து இருந்தாலும், அதன் மதிப்பு குறைவாகவே இருக்கிறது.
மற்ற நிறுவனங்கள்: இது தவிர அல்கைல் அமீன்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், தீபக் நைட்ரைட், டிவிஸ் லேபரட்டரீஸ், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், பிரிட்டானியா மற்றும் டைட்டன் உள்ளிட்ட நிறுவனத்தின் பங்குகளையும் அவர் வைத்து இருக்கிறார். அவரது கைவசம் இருக்கும் பெரும்பாலான பங்குகள் கடந்த ஓராண்டில் நல்ல லாபத்தையே கொடுத்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதர முதலீடுகள்: அடுத்து மியூச்சுவல் பண்டுகள் என வரும் போது அவர் HDFC ஸ்மால் கேப் ரெக்-ஜி, ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ரெக் சேவிங்ஸ்-ஜி, PPFAS FCF D Growth டி க்ரோத் மற்றும் எச்டிஎஃப்சி எம்சிஓபி டிபி ஜிஆர் ஆகிய பங்குகளை அவர் வைத்துள்ளார். 2024 மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி அவரிடம் ரூ. 15.21 லட்சம் மதிப்பிலான தங்கப் பத்திரங்களையும் அவர் வைத்து இருக்கிறார்.
அவரது சொத்துக்கள் என பார்க்கும் போது டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள சொத்து அவருக்கும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவுக்கு சொந்தமானதாக இருக்கிறது.. குருகிராமில் ராகுல் காந்திக்குச் சொந்தமான அலுவலக இடத்தின் மதிப்பு தற்போது 9 கோடியாக இருக்கிறது. தனது விவசாய நிலம் பாரம்பரிய சொத்து எனக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அலுவலக இடம் தனது சொத்தாகக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications