Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"படித்த பெண்களே காரணம்.. லிவ்-இன் உறவே ரொம்ப தப்புங்க.." டெல்லி கொலை பற்றி பாஜக அமைச்சர் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் அரங்கேறிய சாரதா படுகொலை நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக மத்திய அமைச்சர் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

தலைநகர் டெல்லியில் 26 வயது பெண் அவரது காதலனால் கொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில் ஒவ்வொரு நாளும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

 மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

இதற்கிடையே நாட்டையே உலுக்கிய இந்த டெல்லி படுகொலை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதுபோன்ற சம்பவங்களுக்குப் படித்த பெண்களே காரணம் என்றும் அவர்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்காமல் தங்கள் பார்ட்னருடன் லிவ்-இன் உறவில் இருப்பதே காரணம் என்று சாடினார். மேலும், லிவ்-இன் உறவுகள் குற்றங்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் சாடினார்.

 லிவ்இன் உறவு

லிவ்இன் உறவு

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் ஏன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்களில் வாழ்கிறார்கள்? அப்படி லிவ்-இன் உறவுகளில் வாழ முறையான பதிவுகள் இருக்க வேண்டும். இருவரின் காதலைப் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்.. யாராக இருந்தாலும் நீதிமன்றம் சென்று திருமணம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் இருவருமே ஒன்றாக வாழலாமே! அதைவிட்டு விட்டு லிவ் இன் உறவில் இருப்பது ஏன்?

 படித்த பெண்கள்

படித்த பெண்கள்

படித்த பெண்கள் இதுபோன்ற உறவுகளில் இருக்கக் கூடாது. இதுபோன்ற (சாரதாவின் கொலை) சம்பவங்களில் இருந்து நாம் இதுபோன்ற பாடங்களைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பெற்றோரின் ஒப்புதலுக்குப் பின்னரே, யார் உடனாவது சேர்ந்து இருந்திருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் "படித்த பெண்களிடம்" நடைபெறுகின்றன.

 குற்றத்துக்குக் காரணம்

குற்றத்துக்குக் காரணம்

இதுபோன்ற குற்றங்களுக்குப் படித்த பெண்கள் தான் காரணம். அவர்கள் தங்களைப் பெரிய ஆளாக நினைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற முக்கிய முடிவுகளை தங்களால் எடுக்க முடியும் என அவர்கள் நினைத்து தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். லிவ்-இன் உறவு ஒரு தவறான முறை.. இந்த லிவ்-இன் உறவு முறை தான் குற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த 'படித்த' பெண்கள் தான் இதற்கான விலையைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த லிவ்-இன் முறை தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்" என்றார்.

 கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

மத்திய அமைச்சரின் இந்த சர்ச்சை கருத்துக்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எல்லாவற்றுக்கும் பெண்கள்தான் காரணமா? வெட்கமற்ற, இதயமற்ற மற்றும் கொடூரமான நபர்கள் தான் பெண்ணை குற்றஞ்சாட்டுவார்கள். கொடுமை என்னவென்றால் இந்த பிரச்சினைகள் இன்னும் தொடர்கிறது என்பதே" எனப் பதிவிட்டுள்ளார்.

 உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

லிவ்-இன் உறவுகள் ஏற்கனவே நாட்டில் சட்டப்பூர்வமானது தான் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் இப்படியொரு சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். கிராமத்துப் பெண்கள் இதுபோன்ற வலையில் சிக்குவதில்லை என்றும், "படித்த" பெண்கள்தான் இதுபோன்ற குற்றங்களுக்குப் பலியாகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் மேலும் தெரிவித்தார்.

 டெல்லி கொடூரம்

டெல்லி கொடூரம்

26 வயதே ஆன சாரதா என்ற பெண்ணும் அவரது காதலன் அப்தாப் அமீன் என்ற இளைஞரும் தலைநகர் டெல்லியில் லிவ்-இன் உறவில் வாழ்ந்துள்ளனர். சாரதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கக் கடந்த மே மாதம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் சாரதாவை கொடூரமாகக் கொன்ற அப்தாப், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வீசியுள்ளான். இந்தச் சம்பவம் ஆறு மாதங்களுக்குப் பின் இப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+