டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்...இந்த முடிவுகள் எடுக்கலாம்... தீருமா சிக்கல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைமைக்கு சவால் எழுந்துள்ளது. தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்பதுதான் அந்த சவால், பாஜகவை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வருகிறது. இன்றைய கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Congress செயற்குழு கூட்டம்.. முடிவுக்கு வருமா குழப்பம்?

    காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் கட்சிக்குள் முளைத்து இருக்கும் இடைவெளி பிரச்சனை. சோனியா காந்தி தலைமையில் ஒரு கோஷ்டியும், ராகுல் காந்தி தலைமையில் ஒரு கோஷ்டியும் இயங்கி வருகிறது. சோனியாவும், ராகுலும் இதை ஏற்கவில்லை. ஆனால், கட்சி தலைமைக்கு காந்தி குடும்பம் பொறுப்பேற்றால், இவர்களுக்கு கீழ் இருக்கும் தலைவர்கள் எந்த பொறுப்பையும் ஏற்க முன் வருவதில்லை. ஆனால், வெற்றி, தோல்வி மட்டும் காந்தி குடும்பத்துக்கு உரியது என்கிற பாணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் சிலர் பேசி வருகின்றனர். இது சோனியா, ராகுலை சிந்திக்க வைத்துள்ளது.

    What can we expect from today Congress Working Committee meeting

    இன்று நடந்து வரும் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மூத்த தலைவர்களுக்கும் ராகுலுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. ''தற்போது ஏன் சோனியாவுக்கு கடிதம் அனுப்ப வேண்டும், அதன் முக்கியத்துவம் என்ன என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். தலைமை தங்களை சந்தேகிக்கிறது என்று மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பாஜகவுடன் கரம் கோர்த்து இருப்பதை நிரூபித்தால், கட்சியில் இருந்து விலகுவதற்கு தயார் என்று கபில் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் இதுமாதிரியாக முடிவுகள் வெளியாகலாம்:

    • தலைவர் பதவியை சோனியா ராஜினாமா செய்யலாம். வேறு தலைவரை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தலாம்
    • ராகுல் காந்தியை பொறுப்பு ஏற்குமாறு வலியுறுத்தலாம். கட்சியில் இருந்து வேறு ஒருவரை தேர்வு செய்யுமாறு, அவர் பரிந்துரை செய்யலாம்.
    • ஒருவேளை கட்சி தலைமை பொறுப்பை ராகுல் ஏற்கலாம். செயற்குழுவை கலைக்கலாம். சுதந்திரமாக செயல்பட அனுமதி கோரலாம்.
    • தலைவரை தேர்வு செய்யும் வரை சோனியா காந்தியே நீடிக்கட்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தலாம்
    • புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை இடைக்கால தலைவர் பொறுப்பில் நீடிக்குமாறு சோனியாவுக்கு காங்கிரஸ் செயற்குழு அதிகாரம் வழங்கலாம்.
    • மூத்த தலைவர்கள மற்றும் மாநில முதல்வர்களின் வற்புறுத்தலின் பேரில் தலைவர் பதவியில் நீடிக்க சோனியா ஒப்புதல் வழங்கலாம்

    காங்கிரஸ் தலைமை சிக்கல்..புதிதல்ல...முன்பும் இருந்தது...என்ன செய்தார் சோனியா?காங்கிரஸ் தலைமை சிக்கல்..புதிதல்ல...முன்பும் இருந்தது...என்ன செய்தார் சோனியா?

    இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும், குலாம் நபியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கபில் சிபல் குறித்தும் விமர்சனம் எழுந்தது. இதற்கு பதில் அளித்த கபில் சிபல், எனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பாஜகவுக்கு ஆதரவாக கடிதம் எழுதியது இல்லை. அவர்களுடன் கூட்டு சேர்ந்தது இல்லை'' என்று தெரிவித்தார். இன்றைய காங்கிரஸ் கூட்டம் தலைமறை இடைவெளியை வெளிப்படையாகக் காட்டியுள்ளது.

    English summary
    What can we expect from today Congress Working Committee meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X