"லாஸ்ட் சான்ஸ்".. கறாராக சொன்ன நீதிபதிகள்.. ஸ்டன் ஆன ஓபிஎஸ், எடப்பாடி.. கோர்ட்டில் நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று நீதிபதிகள் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். வழக்கு விசாரணை இதனால் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.

இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் 3ம் நாள் தொடர் விசாரணை இன்றும் நடக்கிறது.

பொதுச்செயலாளர் - பொதுக்குழு

பொதுச்செயலாளர் - பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், அதிமுகவில் பொதுச்செயலாளருக்குத்தான் முடிவு எடுக்கும் அதிகாரங்கள் எல்லாம் இருந்தன. அதாவது அவருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இருந்தது. அப்படி இருக்கையில் கட்சி விதிகளை மாற்றம் செய்து பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் கொடுக்கப்பட்டது. இந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த உட்கட்சி மாற்றம் சட்டப்படி செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தீர்ப்பு சுட்டிக்காட்டினார்

தீர்ப்பு சுட்டிக்காட்டினார்

இந்த மாற்றங்களை முன் வைத்துதான் உயர் நீதிமன்றத்தில் வாதம். உயர் நீதிமன்ற தனி நீதிபதி எங்கள் வாதங்களை ஏற்றுக்கொண்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இதுதான் தேர்தல் ஆணையத்தில் இருக்கும் விவரங்கள். அப்படி இருக்கும் போது அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஆனால் இங்கே அவைத்தலைவர் பொதுக்குழுவை கூட்டி உள்ளார். அதோடு அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் நீக்கப்பட்டு உள்ளன.

அவைத்தலைவர்

அவைத்தலைவர்

இது தவறு. அவைத்தலைவருக்கு அப்படியான அதிகாரங்கள் இல்லை. கட்சி விதியில் அதற்கு இடம் இல்லை. பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கினர் ஏற்றுக்கொண்டால் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று விதி கூறவில்லை. அப்படி இருந்தால் கட்சியில் உள்ள மீத பொதுக்குழு உறுப்பினர்கள் என்ன செய்வார்கள். அவர்களின் கருத்தை கேட்க வேண்டாமா? அதனால்தான் இந்த பொதுக்குழு செல்லாது என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். அதனால் உச்ச நீதிமன்றம் அதே வாதங்களை பார்க்க வேண்டும். கட்சி விதிகளை எடப்பாடி தரப்பு அப்பட்டமாக மீறி உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து தரப்பு இதில் வாதம் வைத்தது.

கறாராக பேசிய நீதிபதிகள்

கறாராக பேசிய நீதிபதிகள்

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று கறாராக பேசினார்கள். தொடக்கத்திலேயே இன்றோடு வாதத்தை முடிக்க வேண்டும் என்று கேட்டனர். அதன்பின் நேற்று சொன்ன வாதங்களை மீண்டும் இன்று வைக்க கூடாது என்று கூறினர். இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டுமா? கட்சியின் நலன் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டுமா என்று பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இதன் அடிப்படையிலேயே ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டின் தரப்பும் இன்று வாதம் வைக்கிறது. எடப்பாடி தரப்பு இதற்கு அடுத்து வாதம் வைக்க உள்ளது.

முகுல் ரோத்தகி - அதிமுக

முகுல் ரோத்தகி - அதிமுக

இந்த வழக்கில் இன்று எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம் வைக்க உள்ளார். முகுல் ரோத்தகி இன்று ஆஜராவது எடப்பாடி தரப்பில் அல்ல. மாறாக அதிமுக சார்பாக எடப்பாடி இவரை களமிறக்கி உள்ளார். அப்படி இருக்கும் போது அவர் அதிமுக விதிகள் பற்றித்தான் வாதம் வைப்பார். இதையடுத்து இன்று கோர்ட்டில் வைரமுத்து வைத்த கோரிக்கையில் முகுல் ரோத்தகி கட்சி சார்பாக ஆஜராகிறார் என்றால் அவர் எடப்பாடியை ஆதரித்து வாதம் வைக்க கூடாது. அவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும், என்று குறிப்பிட்டார். இன்றோடு வாதம் முடியும் என்பது இந்த வழக்கில் திருப்பமாக பார்க்கப்படுகிறது. இன்றோடு வாதம் முடியாத பட்சத்தில் வழக்கு அடுத்த வாரம் நடக்காது.. விசாரணை நடக்க 2-3 வாரங்கள் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+