1 வார்த்தை.. கிட்ட போனதுமே சோனியா கேட்ட கேள்வி.. சற்றும் எதிர்பார்க்காத பிரதமர்.. அப்பவும் விடலையே?
டெல்லி: பிரதமர் மோடியும் - சோனியா காந்தியும் என்ன பேசினார்கள் என்பது குறித்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி தந்துள்ளார்.
மணிப்பூரில் வன்முறைக்கு இடையே 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சித்ரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
மணிப்பூர் வன்முறை: இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நேற்றைய தினம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்... ஆனால், சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் தனியாக விளக்கம் அளிப்பார். இன்னொரு நாளில் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதம் நடத்தலாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலளித்திருந்தார்.

ஆனாலும், எதிர்க்கட்சிகள் அதனை ஏற்காமல், விவாதத்தை இன்றே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.. இதையடுத்து, கடும் அமளி ஏற்பட்டால், இந்த மழைக்காலக் கூட்டத்தொடர், முதல் நாளே முடங்கிவிட்டது.
நாடாளுமன்றம்: முன்னதாக, இந்த கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றம் வந்திருந்தார் பிரதமர் மோடி. வரும்போது, அங்கிருந்த மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே வந்தார்... அப்போது எதிர்க்கட்சி வரிசையில் சோனியா காந்தி உட்கார்ந்திருந்தார்.. திடீரென சோனியா அருகில் சென்ற பிரதமர், அவருக்கு வணக்கம் தெரிவித்ததோடு, நலம் விசாரித்தார்..
ஏற்கனவே சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.. இந்நிலையில், சமீபத்தில், பெங்ளூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட சோனியா காந்தி பயணித்த தனி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வணக்கம்: இதனால், அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் மாஸ்க்கை சோனியா அணிந்திருந்தார். எனவே, சோனியாவின் உடல் நலம் குறித்து பிரதமர் விசாரித்தார். சோனியா காந்தியும் தான் நலமாக இருப்பதாக சொல்லி, பதில் வணக்கம் வைத்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து திரும்பும்போது சோனியா பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்தும் மோடி கேட்டறிந்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
இதற்கு பிறகு, தன்னுடைய இருக்கையில் சென்று பிரதமர் அமர்ந்து கொண்டார். மரபுகளின்படியே சோனியா உட்பட அனைவரிடமும் பிரதமர் நலம் விசாரித்தார் என்றாலும், இந்த நிகழ்வை அவையில் அனைவருமே ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.
சோனியா காந்தி: இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கூட்டத்தொடர் நடைபெறும் போது மரபுகளின்படி சோனியா காந்தி உட்பட அனைத்து தலைவர்களிடமும் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்ததாக குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த வேண்டும் என சோனியா காந்தி தெரிவித்ததாகவும், இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி, இந்த விவகாரம் குறித்து "பார்க்கிறேன்" என்று மோடி பதிலளித்ததாகவும் கூறினார். அதற்கு, இரண்டாவது முறையாக அதே கோரிக்கையை பிரதமர் மோடியிடம் சோனியா காந்தி வலியுறுத்தியதாக ஆதிர்சஞ்சன் சுவுத்ரி தெரிவித்துள்ளார்.
மன்னிக்க முடியாது: முன்னதாக, இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள், மனித இனத்துக்கே வெட்கக்கேடானவை. ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழுக்கு நேர்ந்துள்ளது. 140 கோடி இந்தியர்களும் வெட்கப்படுகிறார்கள். மணிப்பூர் மகள்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications