"காஷ்மீர் பிரச்சினை.. உண்மையில் இதற்கு யார் காரணம் தெரியுமா" விளக்கமாக சொன்ன ஆளுநர் ரவி
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி காஷ்மீர் நிலைக்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ளார்
டெல்லி: காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்என் ரவி காஷ்மீரின் இப்போதைய நிலைக்கு என்ன காரணம் என்றும் அங்கு முன்பு என்ன நிலை இருந்தது என்பதையும் விளக்கியுள்ளார்.
மத்திய அரசின் கலாசார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் காட்டும் "விட்டஸ்டா 2023" என்ற நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்ரா பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த தமிழ்நாடு ஆளுநர் ரவி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

ஆளுநர் ரவி
நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. காஷ்மீர் உணவுகள், உடைகள், அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு கலைப் பொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "காஷ்மீர் குறித்த பரத நடனம் மிகச் சிறப்பாக இருந்தது.. மிகவும் தத்ரூபமாக அவர்களின் நடனம் இருந்தது.

காஷ்மீர்
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு காஷ்மீர் எப்படி இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். புத்த மதம் பற்றியது மட்டுமில்லை அது. மதங்களையும் தாண்டி பல விஷயங்கள் அதில் உள்ளது. "வேற்றுமையில் ஒற்றுமை" என்று நாம் சொல்வோம். இது வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் வார்த்தை மட்டும் இல்லை. இதில் நமது வாழ்வியலும் அடங்கி நிற்கிறது. உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ். காஷ்மீருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பல தொடர்புகள் உள்ளன.

வேற்றுமையில் ஒற்றுமை
நமது நாட்டில் சிந்து நதி முதல் காவேரி நதி வரை பல ஆறுகள் ஓடுகின்றன.. இவை வெறும் நீர் நிலைகள் மட்டும் இல்லை. அவை நமது கலாச்சாரத்தை கொண்டே இருக்கிறது. இதன் காரணமாகவே "வேற்றுமையில் ஒற்றுமை" என்பது முக்கியத்துவம் பெறுகிறது. காஷ்மீர் வரலாறு குறித்து இங்குப் பல ஆய்வுகள் நமக்கு தேவைப்படுகிறது. காஷ்மீர் குறித்து நடத்தப்படும் ஆய்வுகள் நிச்சயம் பல விஷயங்களை வெளிகொண்டு வரும்.

காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் விவகாரத்தை எடுத்துக் கொண்டால் அங்கு மேலும் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அரசர் ஹரி சிங் சுதந்திரம் சமயத்தில் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்தார். இருப்பினும், இப்போதும் கூட அங்குத் தொடர்ந்து பல பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரிவினைவாத சக்திகளாலே இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

சிறப்பு அந்தஸ்து
மேலும், நாட்டின் சொந்த மக்கள் காஷ்மீரில் இருந்து வெளியே இருக்க வேண்டிய மோசமான நிலை இருந்தது. ஆனால், இப்போது அங்கு நிலைமை மெல்ல மாறி வருகிறது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டதில் இருந்து அங்குப் பல நன்மைகள் நடந்து வருகிறது. நமது இந்தியா 18ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை பொருளாதாரத்தில் மிகச் சிறப்பான ஒரு நிலையில் இருந்தது. உலகில் தலைசிறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாகவே இருந்தது. இப்போது அந்த நிலை இல்லாமல் போக ஆங்கிலேயர் ஆட்சியே காரணம்.. இதை நாம் மீட்டெடுக்க வேண்டும். இதற்கான பணிகளையும் நாம் செய்ய வேண்டும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications