பஞ்சாப்பில் நடந்தது என்ன?... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி விளக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மீறல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரை அவரது மாளிகையில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார். இன்று திட்டப்படி பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலா பகுதிக்கு செல்ல வேண்டும். மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் இவர் காரில் புறப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

பாலம் ஒன்றுக்கு கீழே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரதமர் மோடியின் கார் அந்த பாலத்திலேயே முடங்கியது. 20 நிமிடமாக கார் அங்கேயே முடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் காரை சுற்றி நின்றனர். கடைசி வரை அங்கு போராட்டம் முடிவிற்கு வரவில்லை.
கடைசியில் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த கூட்டமே மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் இதனால் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார். இந்த சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு குறைபாடுதான் முழு காரணம். எஸ்பிஜி பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது. மாநில போலீசார் மற்றும் அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஎஸ்) கூட்டமும் நடைபெற்றது, அங்கு இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சம்பவம் குறித்து பாஜக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் பேசும் போது கவலை தெரிவித்திருந்தார். பிரதமரை நேரில் வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ள மோடி, பஞ்சாப் மாநிலத்தில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது பற்றி நேரில் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications