கூட்டத்தில் நடந்தது என்ன? மம்தா வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டது.. நிதி ஆயோக் சிஇஓ பரபர பேட்டி
டெல்லி: ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படியே முதல்வர்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஆந்திர முதல்வர் முதலில் பேசினார். அதன்பிறகு அருணாசல பிரதேச மாநில முதல்வர் பேசினார். குஜராத் முதல்வர் பேசுவதற்கு முன்பாக மம்தா பானர்ஜியை பேசுமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். அதன்படி மம்தா பானர்ஜி பேசினார்.
மத்திய திட்ட கமிஷனுக்கு பதில் மத்திய அரசு ‛நிதி ஆயோக்' அமைப்பை உருவாக்கி உள்ளது. இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்து வருகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கை எட்டுவதில் மாநிலங்களின் பங்கு குறித்து நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும், 'விக்சித் பாரத்-2024' தொலைநோக்குப் பார்வைக்கான அணுகுமுறை ஆவணம் மீது ஆலோசனை நடைபெறவுள்ளது.
இதனால் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி இந்தியா கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.
எனினும், பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கவில்லை என்றும் பேசும் போதே மைக் ஆப் செய்யப்பட்டதும் என்று குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். மம்தா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுவதற்கு உரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக அதன் சிஇஓ சுப்ரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக நிதி ஆயோக் சி இஓ கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச வாய்ப்பு கொடுக்கபட்டது. அனைத்து முதல்வர்களுக்கும் பேசுவதற்கு 7 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. உணவு இடைவேளைக்கு முன்பு பேச அனுமதிக்க வேண்டும் என்ற மம்தாவின் கோரிகை ஏற்கப்பட்டது. நிதி ஆயோக் கூட்டத்தில் 26 மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் பங்கேற்றனர். 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை.
"திடீர் மைக் ஆஃப்".. நிதி ஆயோக்கில் கொந்தளித்த மம்தா பானர்ஜி.. கோபமாக வெளிநடப்பு.. என்ன நடந்தது?
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா,பீகார், டெல்லி, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் புதுவை மாநில முதல்வகள் பங்கேற்கவில்லை" என்றார். முன்னதாக மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக முதல்வர் மு.க ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தார். முதல்வர் ஸ்டாலின் கூறும் போது, "இதுதான் கூட்டாட்சி தத்துவமா? மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா?
எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்கி அவர்களை எதிரிகளை போல் நடத்தக் கூடாது. கூட்டாட்சி தத்துவத்தில் அனைவரது கருத்துகளுக்கும் உரையாடல்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications