பாஜக வென்றால் இந்திய பொருளாதாரம் என்னவாகும்.. மொத்தம் 3 சான்ஸ் இருக்கு! அப்போ ஜெயிக்கவில்லை என்றால்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகும் நிலையில், இந்த முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மட்டும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

What happens to economy if BJP secures third term S amp amp P Global explains

வாக்குப்பதிவு முடிந்த உடன் வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் நிச்சயம் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பொருளாதார வல்லுநர்களும் இதைக் கவனித்தே வருகிறார்கள்.

ரிப்போர்ட்: இதற்கிடையே லோக்சபா தேர்தல் முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்த ரிப்போர்ட்டை S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அரசின் மூலதனச் செலவுகள் அதிகரிக்கும்.. மேலும், தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகளும் அதிகரிக்கும் என்பதால் தேர்தலுக்குப் பிறகு பொருளாதாரம் வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்கப் பொருட்கள், எலக்டிரிக் சாதனங்கள், ஜவுளி பொருட்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தளவாடங்கள், உணவு உற்பத்தி போன்ற துறைகளை இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மை உடன் இருக்கும் என்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம்: இது குறித்து S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் மேலும் கூறுகையில், "இந்தத் துறைகள் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையக் காரணமாக இருக்கிறது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக முக்கிய இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை அடையவும் இது உதவும்" என்று கூறப்பட்டுள்ளது. முந்தைய காலாண்டில் 5.7% ஆக இருந்த பணவீக்கம் 2024இல் 5.3% ஆகக் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் குறித்து அந்த ரிப்போர்ட்டில், "பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றால், 2030ஆம் ஆண்டில் இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கும் 2026 நிதியாண்டிற்குள் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஆகக் குறைப்பதும் இலக்குகளாக இருக்கும்

அரசு சேவைகள் மற்றும் தனியார் துறை முழுவதும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படும்.. தனிப்பட்ட தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் ஒழுங்குபடுத்தச் சட்டங்கள் முன்மொழியப்படும் எனத் தெரிகிறது. இவை எல்லாம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பெரும்பான்மை இல்லை என்றால்: அதேநேரம் என்டிஏ கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், புதிதாக அமையும் அரசு சமூக நலத்திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தும்.. மேலும், மத்திய மாநில அரசுகளுடனான ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், ஒரு பரவலாக்கப்பட்ட கொள்கை ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் அமைச்சரவை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்துமே தாமதமாகும்.. இது குறுகிய காலத்தில் பொருளாதாரத்தைப் பாதிக்கலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

யுபிஎஸ் நிறுவனம்: ஏற்கனவே யுபிஎஸ் என்ற புரோக்கிங் நிறுவனம் என்ற நிறுவனம் தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ரிபோர்ட்டை வெளியிட்டு இருந்தது. அதில் பாஜக வென்றால் பங்குச்சந்தை அதிகரிக்கும் என்றும் பாஜக வெல்லவில்லை என்றால் பங்குச்சந்தை குறையும் என்றும் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+