"பேரழிவு நிச்சயம்.." ஐநா பருவநிலை மாநாட்டில் உடைத்து பேசிய இந்தியா.. திரும்பி பார்த்த உலக நாடுகள்
டெல்லி: எகிப்தில் நடந்து வரும் பருவநிலை மாநாட்டில் இந்தியா கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உலகெங்கும் உள்ள நாடுகளுக்குப் பருவநிலை மாற்றம் என்பது முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. வல்லரசு நாடுகள் தொடங்கிப் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் இந்த பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றம் பிரச்சினையை அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து எதிர்கொண்டால் மட்டுமே சரி செய்ய முடியும். இதற்கான முன்னெடுப்பை ஐநா சபையும் செய்துள்ளது,

பருவநிலை மாநாடு
ஐநா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டு எகிப்தில் உள்ள ஷா்ம்-அல்-ஷேக் நகரில் பருவநிலை மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட மொத்தம் 198 நாடுகளைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டுள்ளார்.

வேகம் போதாது
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உலக நாடுகள் போதிய நிதி அளிக்கத் தவறி வரும் சூழலில், உயிர்களைக் காக்க இயற்கை பேரிடர்கள் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பு தேவை என்று பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். மேலும், உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளின் வேகம் போதாது என்றும் அவர் தெரிவித்தார். உலகெங்கும் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் பெரிய ஆபத்தாக உள்ளது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

பேரழிவு நிச்சயம்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பேரிடர்கள் அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறி வரும் சூழலில் உயிர்களைக் காக்க முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பு நமக்குத் தேவை. பசிபிக் மற்றும் கரீபியன் பகுதிகளில் வெப்பமண்டல சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால், சிறிய வெப்பமண்டல நாடுகள் வெறும் சில மணிநேரங்களில் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை இழக்கின்றன.. இதைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேரழிவு ஏற்படக்கூடும்.

இந்தியாவின் நடவடிக்கை
நிதி போதாத நிலையில், முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அவை இங்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் குறைக்காது. நீண்ட கால நோக்கிலும் சமூக-பொருளாதார தாக்கங்களைக் குறைக்கிறது அனைத்து ஹைட்ரோ-வானிலை ஆபத்துக்களுக்கும் முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பை இந்தியா வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

எச்சரிக்கை அமைப்பு
இதனால் கடந்த 15 ஆண்டுகளில் நாட்டில் சூறாவளிகளால் ஏற்படும் இறப்புகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளன.. இதற்கு நாங்கள் உருவாக்கியுள்ள எச்சரிக்கை அமைப்பே காரணம். அதேபோல வெப்ப அலைகள் போன்ற வேறு பருவநிலை ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பை ஏற்படுத்துவதிலும் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்து வருகிறது, கடந்த சில ஆண்டுகளில் இந்த பாதிப்புகளின் ஆரம்ப எச்சரிக்கை தாக்கத்தை எளிதில் மக்கள் புரிந்து கொள்ளும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளோம்" என்று தெரிவித்தார்.

வாக்குறுதிகள்
பருவநிலை மாற்றப் பாதிப்புகளைச் சமாளிக்க நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உலக நாட்டுத் தலைவர்கள் ஜீரோ நெட் எமிஷனுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால், அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவார்கள். இதற்குப் பின்னாவது கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றினால் மட்டுமே, வரும் காலத்தில் பருவநிலை பாதிப்பு குறையும் என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications