தாக்கு பிடிக்குமா பாஜக? மாமனார் என்டிஆர் முதுகில் குத்தி 'கட்சியை'யே களவாடிய சந்திரபாபு நாயுடு!
டெல்லி: "சந்திரபாபு நாயுடு".. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் உச்சரிக்கும் பெயரும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நபரும் கூட.. கிங் மேக்கராக பார்க்கப்படும் சந்திரபாபு நாயுடுவுக்கு இன்னொரு 'நிஜ' முகம் இருக்கிறதே அது எப்போதும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை அச்சமூட்டக் கூடியதுதான்.
74 வயதில் அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் சந்திரபாபு நாயுடு, 1970களில் கல்லூரி காலங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அதுவும் எமர்ஜென்சி காலங்களில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை ஏவிவிட்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய்காந்தியின் படுதீவிர ஆதரவாளர் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபுவின் அரசியல்: காங்கிரஸ் கட்சியில் படிப்படியாக முன்னேறிய சந்திரபாபு நாயுடு, 1978-ம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியில் அமர்ந்தார். 1980-82-ல் அமைச்சரானார். பின்னர் தெலுங்குதேசம் கட்சியை விட்டு வெளியேறி ஆந்திராவில் பெரும் புயலாக அலை வீசிய 'புரட்சித் தலைவர்' என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 1984-ல் என்டிஆர் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் மேற்கொண்ட அரசியல் சதியை அட்டகாசமாக முறியடித்து ' சாணக்கியராக' என்டிஆரிடம் நம்பிக்கையைப் பெற்றார் சந்திரபாபு நாயுடு.
என்டிஆர்- சந்திரபாபு நாயுடு: என்டிஆருக்கு 11 பிள்ளைகள்.. 2 மனைவிகள்.. இத்தனை பேரையும் மீறி என்டிஆரின் மருமகன் சந்திரபாபு நாயுடு எப்படி 'தெலுங்கு தேசம்' கட்சியின் ஓனரானார்? தெலுங்குதேசம் கட்சியை தன் வசமாக்கினார்? என்பது 1990களின் அரசியலில் சுழன்றவர்களை கேட்டாலே கதை கதையாக பக்கம் பக்கமாக சொல்வார்கள்.
என்டிஆருக்கு எதிரான புரட்சி: என்டிஆரின் 2-வது மனைவி லட்சுமி பார்வதியை மையமாக வைத்துதான் சந்திரபாபு நாயுடு அத்தனை சகுனி ஆட்டங்களையும் ஆடினார். பல லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய மேடையில், இதோ லட்சுமி பார்வதியை உங்கள் முன்னிலையிலேயே திருமணம் செய்கிறேன் என அறிவித்துவிட்டு அவரை மேடைக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார் என்டிஆர்.. லட்சுமி பார்வதியும் மேடைக்கு செல்கிறார்.. அங்கே திடீரென கரண்ட் கட்.. கூட்டம் ஆர்ப்பர்க்கிறது.. முன்வரிசையில் அமர்ந்திர்ந்த சந்திரபாபு நாயுடுவும் அவரது ஆதரவாளர்களும் மிஸ்ஸிங்.. லட்சுமி பார்வதியை என்டிஆர் திருமணம் செய்தாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருந்தது.. அந்த கரண்ட்டை கட் செய்த புண்ணியவான் சந்திரபாபு நாயுடு காருதான்.

என்டிஆரில் முதுகில் குத்திய கட்சியை கைப்பற்றியவர்: 1990களில் ஆந்திரா, தேசிய அரசியலில் அதி உச்சத்தில் இருந்தவர் என்டிஆர். அசைக்கவே முடியாத ஆளுமையாக இருந்த என்டிஆரின் முதுகில் சரமாரியாக குத்தி முதல்வர் பதவியை விட்டு துரத்திவிட்டு சட்டசபையிலும் பொதுவெளியிலும் சிங்கமென கர்ஜித்த புரட்சித் தலைவரை புழுதிப் புழுவென துடிதுடிக்க வைத்து ' அரசியல்' ஆட்டங்களை ஆட்டிய சகுனிதான் சந்திரபாபு நாயுடு என்பது சரித்திரம் சொல்லும் பக்கம். 1995-ல் என்டிஆரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி அடித்த போது சந்திரபாபு நாயுடு ஆடிய ஆட்டங்கள் இப்போதும் நினைத்தாலே பகீர் ரகம்.. என்டிஆருக்கா இப்படி ஒரு கதி.. என்கிற நிலைமயை உருவாக்கியவர் சந்திரபாபு நாயுடு. இத்தனை அவமானங்களையும் துயரங்களையும் நெஞ்சில் ஏந்தியபடி எத்தனை காலம்தான் என்டிஆரால் வாழ்ந்துவிடமுடியும்? 1996-ம் ஆண்டு இந்த உலகைவிட்டே மறைந்து போனார் மாபெரும் தலைவரான என்டிஆர்.
ஜனநாயகத் துயர்: இன்றைய உலகம் இதனை மறந்து போயிருக்கும்.. என்டிஆரின் குடும்பமும் என்டிஆரின் ஆதரவாளர்களும் இன்றைக்கும் இதனை மறக்காதவர்கள்.. சொந்த மாமனாரின் முதுகில் குத்தி அவரது தெலுங்குதேசம் என்ற கட்சியையே ஆட்டைய போட்டு குடும்ப சொத்தாக்கிக் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் கையில்தான் 'இந்தியாவின்' ஆட்சி அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்ற முடிவு என்பதெல்லாம் 'ஜனநாயக'த்திருநாட்டில் துயர காலம்தான்!












Click it and Unblock the Notifications