முப்படைகளில் 4 ஆண்டுகள் பணி.. அக்னிபாத் திட்டத்தின் சிறப்பசங்கள் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 4 ஆண்டு பணியாற்றும் திட்டமாக அக்னிபாத் உள்ளது. இந்த திட்டத்தில் சேவை நிதி, இழப்பீடு, இன்சுரன்ஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
Recommended Video
இந்தியாவின் பாதுகாப்பில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவை முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த முப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் ‛அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டுள்ளார். அக்னிபாத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:

4 ஆண்டு பணி
அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும். 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். இவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஒருவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருக்கலாம். முப்படையில் பணியில் சேர்வோருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்வி தகுதியே இதற்கும் பொருந்தும். ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் துவங்க உள்ளது. 46 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முறையான அறிவிப்புக்கு பிறகு 6 மாத கால இடைவெளியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம் எவ்வளவு?
இந்த நான்கு ஆண்டுகள் என்பது பயிற்சி காலத்தையும் உள்ளடக்கியாதாகும். மாத சம்பளமாக படிகளுடன் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரமும் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரையும் கிடைக்கும். அதன்படி முதல் ஆண்டு ரூ.30 ஆயிரமும், 2ம் ஆண்டில் ரூ.33,000ம், 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிடித்தம் எவ்வளவு?
இதில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70 சதவீத தொகை வழங்கப்படும். அதன்படி முதல் மாதத்தில் ரூ.9 ஆயிரம் சேவை நிதிக்கான பங்களிப்பு தொகையாக பிடிக்கப்பட்டு ரூ.21 ஆயிரம் மட்டும் கையில் கிடைக்கும். 4வது ஆண்டில் மட்டும் சம்பளமாக ரூ.6.92 லட்சம் கிடைக்கும். பிடித்ததற்கு ஏற்ப மத்திய அரசு சார்பில் ராணுவ வீரர்களின் சேவை நிதிக்கும் பணம் வழங்கப்படும். இத்தொகை இறுதியில் சேவை நிதியாக வழங்கப்படும்.

இன்சூரன்ஸ் வசதி
மேலும் வீரர்களின் பங்களிப்பு இன்றி ரூ.48 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் வசதி கிடைக்கும். இத்தகைய நியமனத்தில் 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். இவர்கள் வழக்கமான ராணுவ வீரர்களை போல் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

இழப்பீடு எவ்வளவு?
இதற்கிடையே பணியின்போது வீரமரணம் அடைந்தால் ரூ.44 லட்சம் இழப்பீடுாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளியாக மாறினால் மாற்றத்திறனுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி 75 சதவீத மாற்றத்திறனுக்கு ரூ.25 லட்சம், 50 சதவீத மாற்றுத்திறனுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications