கூகுள் பே, போன் பே யூஸ் பண்றீங்களா! உங்களுக்காகவே வருது செம சூப்பர் வசதி! மேஜர் பிரச்சினைக்கு தீர்வு
டெல்லி: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக யுபிஐ லைட்டிலும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கிடையே இப்போது யுபிஐ லைட்டில் புதிதாக ஒரு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிமையானதாக மாற்றும்.
இந்த காலத்தில் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் நடைமுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில்லறை பிரச்சினை, திருட்டு பயம் எனப் பல காரணங்களால் மக்கள் பணத்திற்குப் பதிலாக யுபிஐ செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

யுபிஐ லைட்: அதேபோல யுபிஐ-இல் சிறிய தொகைகளை அனுப்ப யுபிஐ லைட் என்ற ஒரு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே யுபிஐ லைட் பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது வரும் அக். 31ம் தேதி முதல் உங்களின் யுபிஜ லைட் கணக்கில் நீங்கள் விரும்பும் தொகையை ரீலோட் செய்ய ஆட்டோ டாப்-அப் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது இதுவரை நீங்கள் யுபிஐ லைட்டை பயன்படுத்த வேண்டும் என்றால்.. முதலில் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அதற்கு மாற்ற வேண்டும். அதன் பின்னரே பயன்படுத்த முடியும். அதேநேரம் நீங்கள் ஆடோ லோட் ஆப்ஷனை தேர்வு செய்துவிட்டால்.. யுபிஐ லைட்டில் பணம் ஜீரோ ஆகும் போது தானாக நீங்கள் குறிப்பிடும் தொகை வங்கிக் கணக்கில் இருந்து மாற்றப்படும். இதன் மூலம் ஈஸியாக யுபிஐ லைட் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
எப்போது அமலுக்கு வரும்: கடந்த ஆக. 27ம் தேதி இது தொடர்பாகச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வரும் அக். 31 முதல் இந்த யுபிஜ லைட் முறை அமலுக்கு வரும் என்று என்பிசிஐ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த வசதியில் நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட தொகை யுபிஜ லைட்டில் தானாகவே லோட் ஆகிவிடும்.
இதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் யுபிஜ லைட் மூலம் ₹500க்குக் குறைவான பரிவர்த்தனைகளை பின் இல்லாமல் மேற்கொள்ள முடியும். அதேநேரம் இந்த ரீலோட் வசதியைப் பயன்படுத்தி ₹2,000 மட்டுமே தானாக ரீலோட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பயனர்கள் எந்த நேரத்திலும் இந்த ஆட்டோ டாப்-அப் வசதியை ஆன் செய்து கொள்ளவும் முடியும். ஆஃப் செய்யவும் முடியும்.
ஆடோ லோட்: இப்போது யுபிஜ செயலியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதில் நாம் ஒவ்வொரு முறையும் பின் போட வேண்டும். ஆனால், ரூ.500க்கு கீழ் பின் எதுவும் இல்லாமல் உடனடியாக பரிவர்த்தனை செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட முறை தான் யுபிஐ லைட். இதை வாலெட் போல செயல்படுவதால் பணம் அனுப்பும் போது பின் தேவைப்படாது. இந்த யுபிஐ லைட்டில் தான் இப்போது புதிதாக ஆடோ லோட் வசதி வந்துள்ளது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
யுபிஜ லைட்டின் இந்த ஆடோ டாப்-அப் வசதியை அனைத்து வங்கிகளும் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று என்பிசிஐ அறிவித்துள்ளது. அனைத்து யுபிஐ செயலிகளிலும் இதற்காகத் தனியாக ஒரு பகுதியை உருவாக்க வேண்டும் என்றும் என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பணம் ஆடோ லோட் ஆகும்.
ரூல்ஸ்: மேலும், பயனாளர் இந்த ஆடோ லோட் ஆப்ஷனை தேர்வு செய்தால் மட்டுமே இது செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் டிஃபால்ட்டாக ஆன் மோடில் இருக்கக்கூடாது என்றும் என்பிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளில் 5 முறை மட்டும் இந்த ஆடோ லோட் ஆப்ஷனில் பணம் லோட் ஆகும்.
யுபிஐ லைட் மோட் பேங்கின் கோர் சிஸ்டம் மோடிற்கு வெளியே நடப்பதால் இப்போது இந்த முறையையே பல வங்கிகள் பிரபலப்படுத்த முயன்று வருகின்றன. குறைந்த பரிவர்த்தனைகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.












Click it and Unblock the Notifications