டிரம்ப்பிற்கு பதிலடி தரும் இந்தியா? "ரெசிப்ரோக்கல் வரி.." மத்திய அரசு அதிகாரி சொன்ன முக்கிய தகவல்
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் அதற்கு பதிலடி தரும் வகையில் வரிகளை அறிவித்து வருகின்றன. இந்தியா மீது டிரம்ப் 26% வரி விதித்துள்ள நிலையில், இந்தியா அதற்கு பதிலடி கொடுக்குமா என்பது பலரது கேள்வியாக இருந்தது. இதற்கிடையே இதற்கு மத்திய அரசு அதிகாரிகள் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துள்ளனர்..
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது சர்வதேச அளவில் ஒரு வணிக போரை தொடங்கியுள்ளது. கனடா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு பதிலடியாக வரிகளை அறிவித்துள்ளன.

இந்தியா மீதான வரி
இந்த ரெசிப்ரோக்கல் வரியில் இந்தியா மீது டிரம்ப் 26% வரிகளை அறிவித்தார். மோடி தனக்கு நல்ல நண்பர் தான் என்ற போதிலும், இந்தியா தங்களை நன்றாக நடத்தவில்லை என்றே குறிப்பிட்ட டிரம்ப் இந்த வரியை அறிவித்தார். இந்த வரியால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் சுமார் 2% வரை சரிந்த இந்திய பங்குச்சந்தைகள், இந்தாண்டும் தொடர்ந்து சரிந்தது.
இந்தியா வரியை அறிவிக்குமா
இதற்கிடையே உலகின் மற்ற நாடுகளை போல இந்தியாவும் டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரிகளை அறிவிக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இருப்பினும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் பதிலடி தரும் வகையில் வரிகளை அறிவிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியா முன்கூட்டியே அமெரிக்கா உடன் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாகவும் இதனால் விரைவில் டீல் இறுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்காமலேயே இந்தியாவுக்கு சாதகமான விஷயங்கள் நிச்சயம் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு குறைவு
மேலும், இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா (34%), வியட்நாம் (46%) மற்றும் இந்தோனேசியா (32%) ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது இந்தியாவுக்கு நன்மையே தரும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு சாதகம்
டிரம்ப் அறிவித்த வரிகளில் மற்றொரு முக்கிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அதாவது ரெசிப்ரோக்கல் வரி அறிவிக்கப்பட்டாலும் செமிகண்டெக்டர், காப்பர் மற்றும் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து தான் அதிகளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு விலக்கு தரப்பட்டுள்ளதால் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு வகையில் இது நல்ல செய்திதான்.
-
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications