ராகுல் காந்தியால் டென்ஷனான சசிதரூர்.. நேரில் போய் கேட்ட கேள்வி.. பரபரக்கும் காங்கிரஸ் மேலிடம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சசிதரூர், ராகுல் காந்தியை பார்த்து பேசியுள்ளார். அப்போது சசிதரூர் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி சரியாக பதிலளிக்காமல் இருந்ததாகவும், இதனால் சசிதரூர் கடும் டென்ஷனாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சசிதரூர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூர் தற்போது திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்பியாக உள்ளார்.

இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்டுள்ளார். நீண்ட காலமாக அவருக்கு கட்சியில் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை. இதனால் சசிதரூர் கடும் அதிருப்தியில் உள்ளார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தியை, சசிதரூர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது கட்சியில் தனக்கு எந்த மாதிரியான பொறுப்பும் தரவில்லை. கட்சியில் ஆக்டிவ்வாக செயல்பட விரும்புகிறேன். ஆனால் இப்போது கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சிக்காக பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன். வெறும் எம்பி பதவியை வைத்து என்ன செய்வது?, கட்சி பதவியில் இருந்து கட்சியை வளர்க்க விரும்புகிறேன். ஆனால் என்னை கட்சி ஓரம் கட்டுகிறது. நான் அப்படி என்ன தப்பு செய்தேன்?'' என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ராகுல் காந்தி சரியாக எந்த பதிலும் சொல்லவில்லை. அதோடு அவரது குறைகளுக்கு செவிசாய்க்காமல் சென்றுள்ளார். இதனால் சசிதரூர் கடும் டென்ஷனாகி உள்ளார். அதோடு ராகுல் காந்தி மற்றும் கட்சி மேலிடம் மீது சசிதரூர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் சசிதரூருக்கு கட்சியில் எந்த பதவியும் காங்கிரஸ் கொடுக்காமல் ஓரம்கட்டுவதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சசிதரூரின் சில செயல்பாடு என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக இருக்கும். அதாவது கடந்த 2022ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே போட்டியிட்டார். சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரவில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து சசிதரூர் போட்டியிட்டார். அவருக்கு சோனியா, ராகுலின் ஆதரவு என்பது இல்லை. மேலும் சில வேளைகளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கேரளாவை ஆளும் இடதுசாரிகளின் செயல்பாட்டை சசிதரூர் பாராட்டி உள்ளார். காங்கிரஸ் இதனை விரும்பவில்லை.
சமீபத்தில் கூட அமெரிக்கா சென்று அதிபர் டொனால்ட் டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதனை காங்கிரஸ் ரசிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கை, காலில் விலங்கு போட்டு அழைத்து வரப்படுவதை வைத்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்த நிலையில் சசிதரூர், மோடியை பாராட்டியிருந்தார். இதுபோன்ற நடவடிக்கையால் தான் காங்கிரஸ் கட்சி சசிதரூரை ஓரம்கட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நீண்டகாலமாக அமைதி காத்து வந்த சசிதரூர் இப்போது ராகுல் காந்தியிடம் தனது குறைகளை கூறியும், அதனை சரிசெய்வதாக ராகுல் காந்தி உறுதியளிக்கவில்லை. இதனால் சசிதரூர் அதிருப்தியில் உள்ளார்.












Click it and Unblock the Notifications