பூஸ்டர் டோஸ் என்ற வார்த்தையை சொல்லாத மோடி.. அது என்ன 'Precaution Dose'? பின்னணியில் முக்கிய காரணம்!
டெல்லி: இந்தியாவில் ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகிறது. ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 451 ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாட்டு மக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் திடீரென அவர் மக்கள் முன் உரையாற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவித்தார். இதில் இந்தியாவில் 15-18 வயது கொண்டவர்களுக்கு கொரோனா வேக்சின் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை டோஸ்
மேலும் இந்தியாவில் "முன்னெச்சரிக்கை டோஸ்கள்" எனப்படும் மூன்றாவது டோஸ் ஜனவரி 10 ம் தேதி முதல் முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், உடல் உபாதைகள் கொண்ட வயதானவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி ஏன் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்பது விவாதம் ஆகி உள்ளது.

Precaution Dose
உலகம் முழுக்க மூன்றாவது டோஸுக்கு பூஸ்டர் டோஸ் என்ற பெயர்தான் வைக்கப்பட்டு இருக்கிறது. பூஸ்டர் டோஸ் என்ற பதத்தை பிரதமர் மோடி பயன்படுத்தவில்லை. மாறாக 'Precaution Dose' என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி இப்படி பயன்படுத்தியதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் வேக்சினுக்கான நிதி ஆயோக்கின் வல்லுனர் குழு ஏற்கனவே 3வது டோஸ் குறித்த பரிந்துரைகளை மேற்கொண்டு உள்ளது.

பூஸ்டர் டோஸ்
அதில் மூன்றாவது டோஸ் போடப்பட்டால் அது வேறு ஒரு நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதாம்.அதாவது இரண்டு டோஸ் கோவாக்சின் போட்டுகொண்டால் மூன்றாவது டோஸை வேறு நிறுவன வேக்சின் போடலாம். இது அதிக பாதுகாப்பை அளிக்கும். எதிர்ப்பு திறனை அளிக்கும்.

மூன்றாவது டோஸ்
உலக சுகாதார மைய வழிகாட்டுதல்படி இதனால் பக்க விளைவு இருக்காது என்று நிதி ஆயோக்கின் வல்லுனர் குழு தனது பரிந்துரையை மேற்கொண்டு உள்ளதாம். இதனால் மூன்றாவது டோஸ் போடப்படும் நபர்களுக்கு அவர்கள் இரண்டு டோஸ் போட்ட நிறுவனத்தில் இருந்து இல்லாமல் வேறு ஒரு வகையான வேக்சின் போடப்படும். அடினோ வெக்டர் வகை வேக்சின் போடப்பட்டவர்களுக்கு டிஎன்ஏ வேக்சின் கூட போடப்பட வாய்ப்பு உள்ளது.

பூஸ்டர் இல்லை
இதனால் இப்படி போடப்படும் வேக்சின்களை சாதாரண பூஸ்டர் என்று அழைக்க முடியாது. பொதுவாக இரண்டு டோஸ் வேக்சின்கள் எந்த பிராண்டில் போடப்பட்டதோ அதே பிராண்ட்தான் 3வது டோஸாக போடப்படும். இதனால் இது பூஸ்டர் என்று அழைக்கப்படும். ஆனால் இந்தியாவில் 3வது டோஸ் வேக்சின் வேறு வகையாக இருக்கும் என்பதால் அதை பிரதமர் மோடி 'Precaution Dose' அழைத்து இருக்கிறார்.

பிரதமர் மோடி உரை
இதனால் ஒரு நிறுவனத்தின் இரண்டு டோஸ் கோவாக்சின் போட்டுகொண்டால் மூன்றாவது டோஸாக வேறு நிறுவன வேக்சின் போடலாம் என்று அறிவிப்பு விரைவில் வரும். நானோ வேக்சினான கோவாவாக்ஸ், பயோ இ வேக்சின் போன்ற வேக்சின்கள் இப்படி முன்னெச்சரிக்கை டோஸ்களாக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவை 60 வயது தாண்டியவர்களில் 12.04 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

எத்தனை பேருக்கு
இதில் 9.21 கோடி பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல் 1.03 கோடி மருத்துவ பணியாளர்கள், 1.83 கோடி முன்கள பணியாளர்களுக்கு இரண்டு டோஸ் போடப்பட்டள்ளது.
இவர்களுக்கு இரண்டு டோஸ் போட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் இவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக இந்த முன்னெச்சரிக்கை டோஸ்கள் போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications