அமலாக்கத்துறை எஸ்கே மிஸ்ராவின் கடைசி ரெய்டு எங்கே தெரியுமா.. தமிழகம் முழுக்க நடந்த அந்த சோதனை
டெல்லி: அமலாக்கத்துறைக்கு இப்போது புதிய இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனை காலம் அதன் இயக்குநராக எஸ்கே மிஸ்ரா இருந்த நிலையில், அவரது தலைமையில் அமலாக்கத்துறை நடத்திய கடைசி ரெய்டு என்ன என்று பார்க்கலாம்.
அமலாக்கத் துறையின் இயக்குநராக இருப்பவர் எஸ்கே மிஸ்ரா. இவரது பதவிக் காலம் இன்றுடன் (செப். 15) நிறைவடைகிறது. ஏற்கனவே இவரது பதவிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்தச் சூழலில் அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை ராகுல் நவீன், பொறுப்பு இயக்குநராகச் செயல்படுவார்.
எஸ்கே மிஸ்ரா: இது ஒரு பக்கம் இருக்க எஸ்கே மிஸ்ரா தலைமையில் அமலாக்கத்துறை நடத்திய கடைசி ரெய்டு தமிழ்நாட்டில் தான். இது குறித்து விரிவாக அதற்கு முன்பு எஸ்கே மிஸ்ரா குறித்தும் அவரது பதவி நீதிமன்றம் வரை சென்றது எப்படி என்பது குறித்தும் நாம் இதில் பார்க்கலாம். 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ரா 1984 இல் இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியாகக் குடிமைப் பணியில் இணைந்தார். அமலாக்க இயக்குநரகத்திற்கு வருவதற்கு முன்பு அவர் டெல்லியில் வருமான வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்கே மிஸ்ரா, வருமான வரித்துறையில் பல முக்கிய வழக்குகளைச் சிறப்பாக விசாரித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரை அமலாக்கத் துறை இயக்குநராக நியமித்தது மத்திய அரசு.. முதலில் கடந்த 2018 அக்டோபரில் இடைக்கால இயக்குநராக மூன்று மாதங்களுக்கு எஸ்கே மிஸ்ரா நியமிக்கப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து நவம்பர் 2018இல் அவர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
பதவி நீட்டிப்பு: எஸ்கே மிஸ்ராவின் பதவிக்காலம் 2020இல் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு அதைச் சத்தமில்லாமல் அதை ஓராண்டிற்கு முதலில் நீட்டித்தது. அதைத் தொடர்ந்து நவ. 2021இல் அவரது பதவி மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குநர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
தொடர்ந்து நவ. 2022இல் மிஸ்ராவுக்கு 3ஆவது முறையாக 2023 நவ. 18 வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்த நிலையில், செப்டம்பர் 15-க்குப் பின்னர் எஸ்கே மிஸ்ரா எந்த நிலையிலும் அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கவே கூடாது என்று உத்தரவிட்டது. மேலும். செப்டம்பர் 15-ந் தேதி நள்ளிரவுடன் எஸ்கே மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைந்ததாகக் கருதப்படும் என உத்தரவிட்டது.. அதைத் தொடர்ந்தே இன்று புதிய இடைக்கால இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடைசி ரெய்டு: சரி, எஸ்கே மிஸ்ரா தலைமையில் இருந்த சமயத்தில் அமலாக்கத்துறை நடத்திய கடைசி ரெய்டு குறித்து பார்க்கலாம். இந்த ரெய்டும் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் 34 இடங்களில் ரெய்டு நடந்தது. இதுவே எஸ்கே மிஸ்ரா தலைமை பொறுப்பில் இருந்த போது அமலாக்கத் துறை நடத்திய கடைசி ரெய்டாக மாறிப் போனது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது.
எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் ஆடிட்டர் பி.சண்முகராஜ் என மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடைபெற்றன. இந்த ரெய்டில் 12.82 கோடி ரூபாயை அமலாக்கத் துறை கைப்பற்றி இருக்கிறது. கணக்கில் வராத ₹ 2.33 கோடி பணம், ₹56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றி இருக்கிறது. இதுவே எஸ்கே மிஸ்ரா தலைமை பொறுப்பில் இருந்த போது நடந்த கடைசி ரெய்டாக அமைந்தது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications