"பிளான் பி.." நாடாளுமன்ற தாக்குதல் சதிகாரர்கள் வைத்திருந்த பகீர் திட்டம்.. இது விபரீதம் ஆச்சே
டெல்லி: நாடாளுமன்றத்தில் அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களின் பிளான் பி குறித்து சில பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்ற ஸ்ப்ரே அட்டாக் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அவர்கள் பிளான் ஏ மற்றும் பிளான் பி என இரண்டு திட்டங்களை வைத்திருந்தார்களாம்.
பிளான் பி: அதாவது நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் இந்தத் திட்டம் தோல்வி அடைந்தால் பிளான் பி ஒன்றையும் வைத்திருந்தார்களாம். அதாவது திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தை அடைய முடியாமல் போனால், பிளான் பி ஒன்றை வைத்திருந்ததாக இந்தத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா விசாரணையின் போது போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் நாடாளுமன்றத்தின் உள்ளே புகை குப்பிகளைப் போட்டு ரகளையில் ஈடுபட்ட நிலையில், நீலம் மற்றும் அமோல் ஆகிய இருவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே வளாகத்தில் ரகளை செய்தவர்கள். இதுதான் அவர்களின் பிளான் ஏ... ஒருவேளை நீலம் மற்றும் அமோலால் சில காரணங்களால் நாடாளுமன்றத்தை அடைய முடியாமல் போனால், அவர்களுக்குப் பதிலாக மகேஷும் கைலாஷும் நாடாளுமன்றம் நோக்கி வருவார்கள்.
சிக்கல்: அவர்கள் இருவரும் சேர்ந்து கலர் புகைக் குண்டுகளை வீசி, ஊடகங்கள் முன் முழக்கங்களை எழுப்புவார்கள். இதுதான் அவர்கள் பிளான் பி ஆக இருந்துள்ளது. இருப்பினும், மகேஷ் மற்றும் கைலாஷ் ஆகியோரால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருந்த குருகிராமில் உள்ள விஷால் சர்மா என்ற விக்கியின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதன் காரணமாகவே அமோல், நீலம் என்ன ஆனாலும் நாடாளுமன்ற வளாகத்தில் பிரச்சினை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இந்த மிக மோசமான சம்பவம் அரங்கேறியது. 2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாளில், லோக்சபா நடந்து கொண்டிருந்த போது சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்துப் புகைக் குண்டுகளை வீசி, முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கிருந்த சில எம்பிக்களே அவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் ரகளையில் ஈடுபட்டனர்.
தலைமறைவு திட்டம் சொதப்பல்: அதன்படி திட்டமிட்டபடி அவர்கள் பிளான் ஏ திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அனைத்தையும் வீடியோவாக எடுத்தவர் இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லலித் ஜா. அவைக்கு வெளியே நடந்தது அனைத்தையும் வீடியோவாக எடுத்து ஊடகங்களில் கொடுக்கும் பொறுப்பு இவருடையது. இதை செய்து முடித்துவிட்டுத் தலைமறைவாகவும் அவர் திட்டம் தீட்டியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி, லலித் ராஜஸ்தானில் தலைமறைவாவார் என்றும் அதற்கான பொறுப்பு மகேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications