டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குளிருக்கு நடுவே டெல்லியில் கூடிய "வெப்பம்".. ஆளுநர் ரவி போனது ஏன்? நோட்டமிட்ட திமுக.. இதான் காரணமா!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. டெல்லிக்கு ஆளுநர் ஆர். என் ரவி மீண்டும் பயணம் மேற்கொண்டது ஏன் என்பது தொடர்பாக திமுக வட்டாரங்களும் தீவிரமாக கண்காணிப்புகளை நடத்தி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் பல்வேறு கட்டங்களாக பரிணமித்து தற்போது கட்டுக்கடங்காத நிலையை அடைந்து உள்ளது. இனி இருவரும் சுமுகமாக செல்ல வாய்ப்பு குறைவு என்று சொல்லும் அளவிற்கு நிலைமை கைமீறி சென்று உள்ளது.

தமிழ்நாடு ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையிலான மோதல் முதலில் தொடங்கியது நீட் தேர்வு மசோதாவில் இருந்ததுதான். நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதில் இருந்துதான் இரண்டு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்டன.

சட்டசபை விவகாரம்..ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்..அமித் ஷாவிடம் பேசப்போவது என்ன? சட்டசபை விவகாரம்..ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்..அமித் ஷாவிடம் பேசப்போவது என்ன?

மோதல் உச்சம்

மோதல் உச்சம்

அதில் இருந்தே தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவிக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக இந்துத்துவா குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

பதவி நீக்கம்

பதவி நீக்கம்

இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். இந்த மசோதாவிற்கு இடையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு - தமிழகம் சர்ச்சையை கிளப்பினார். தமிழகம் என்ற வார்த்தையே பொருத்தமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாட்டில் திமுக, திமுக கூட்டணி கட்சிகள் கடுமையாக கொந்தளித்து உள்ளன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று முதல்நாள் தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.

பதிலடி

பதிலடி

இதற்கு சட்டசபையிலேயே பதிலடி கொடுக்கும் விதமாக ஆளுநர் ஆர். என் ரவி உரைக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதோடு ஆளுநர் உரை நீக்கப்பட்டு அரசு தயாரிக்கப்பட்ட உரை அவையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்தே தமிழ்நாடு ஆளும் திமுக பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரிடம் முறையிட்டனர். இதில் ஆளுநருக்கு எதிராக புகார் வைக்கப்பட்டது. முன்னதாக ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதினார்.அதில், ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 9 அன்று ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத் தொடர் துவங்கியது. இந்த உரைக்கான வரைவினை தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு முன்னதாகவே அனுப்பி அதற்கு அவரது ஒப்புதல்ஜனவரி 7 ல் பெறப்பட்டது. உரையினை இதனடிப்படையில், இந்த அச்சிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

அறிவுரை

அறிவுரை

இந்நிலையில் அன்றைய தினம் சட்டசபையில் ஆளுநர் தனது உரையில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு உரையிலிருந்த பல பகுதிகளைப் படிக்காமலும் உரையில் குறிப்பிடப்படாத பல புதிய கருத்துகளை இணைத்தும் உரையாற்றினார். சட்டசபையின் தொடக்க நாளில் அவர் நடந்து கொண்ட விதமும், சட்டமன்ற மாண்பினை அவமதிக்கும் வகையில் அவர் நடந்து கொண்டதும் காணப்படுகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைச்சரவையின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி நடப்பதை உறுதிசெய்யவும், அதன் மூலம் மக்களுக்கு மாநில அரசு சிறந்ததொரு நிர்வாகத்தை வழங்க வழிவகை செய்யவும், மக்களாட்சித் தத்துவம் செம்மையடையவும் அவருக்கு அறிவுரை வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளார், என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

டெல்லி

டெல்லி

தமிழ்நாடு எம்பிக்கள் டெல்லி சென்ற மறுநாளே ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றார். அங்கு அவர் உள்துறை அதிகாரிகளை சந்தித்தாக கூறப்பட்டது. இந்த சந்திப்பிற்கு மறுநாளே ஆளுநர் ஆர். என் ரவி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை கேட்டார். பொதுவாக குடியரசுத் தலைவர் இது போன்ற விவகாரங்களில் தாமாக முடிவு எடுக்க மாட்டார். அவர் உள்துறையிடம் ஆலோசனை கேட்டு நடப்பார். அவர்கள் சொல்வதைத்தான் பெரும்பாலும் செய்வார். இந்த நிலையில்தான் ஆளுநர் ரவிக்கு எதிரான புகார் குறித்து உள்துறையிடம் குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டார்.

கோப்பு

கோப்பு

இதில் இன்னும் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி டெல்லி சென்றுள்ளார். ரவியை சிலர் தரக்குறைவாக பேசியது சமீபத்தில் சர்ச்சையானது. அதோடு முதல்வரும் ஒரு இடத்தில் ஒருமையில் விமர்சனம் செய்து இருந்தார். இதில் ஆளுநரை தரக்குறைவாக பேசிய நபர் மீது போலீஸ் நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை. இதை பற்றிய புகார்களை அடங்கிய கோப்புகளுடன்தான் ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவியின் இந்த பயணத்தை டெல்லியில் இருக்கும் திமுக தலைவரும் தீவிரமாக கவனித்து வருகிறார்களாம். திமுக பற்றி புகார் கொடுக்க போகிறாரா அல்லது அவருக்கு எதிராகவே விசாரணை நடக்க போகிறதா என்று திமுக தரப்பு நோட்டமிட்டு வருகிறதாம்.

English summary
What is the real reason behind Tamil Nadu Governor R N Ravi sudden Delhi trip?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X