பிரிட்டன் மன்னரான சார்லஸ்.. ஒடிசா கிராமத்தில் ஓஹோவென கொண்டாட்டம்.. அடடா! இப்படி ஒரு கனெக்ஷனா!
டெல்லி: பிரிட்டன் அரசராக சார்ல்ஸ் பதவியேற்றுள்ள நிலையில், அதை ஒடிசா கிராமத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் கொண்டாடித் தீர்த்து உள்ளனர்.
பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் மகாராணி எலிசபெத் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார்.
96 வயதான இவர், கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார். வயது மூப்பு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அவர் தொடர்ந்து தவிர்த்தே வந்தார்.

பிரிட்டன்
இந்தச் சூழலில் தான் பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் இந்தியா நேரப்படி கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பிரிட்டன் மக்களை கடும் சோகத்தில் உள்ளனர். மேலும், ராணி உயிரிழந்துள்ள நிலையில், அவரது மூத்த மகன், 73 வயதான சார்லஸ், பிரிட்டன் அடுத்த அரசராகப் பொறுப்பேற்றார். சுமார் 70 ஆண்டுகளாக மகாராணி எலிசபெத் தலைமை தாங்கி வந்த நிலையில், சார்லஸ் அரசராக முடி சூடப்பட்டார்.

புதிய மன்னர்
வயது மூப்பு காரணமாக இரண்டாம் எலிசபெத் ஓய்வில் இருந்த நிலையில், அவரது அவரது மூத்த மகனும் புதிய அரசருமான சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து வந்தார். புதிய மன்னராகப் பதவியேற்ற சார்லஸுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் அரசராக சார்லஸ் பதவியேற்றதற்கு ஒடிசாவில் உள்ள இரு கிராமங்கள் கொண்டாடி வருகிறது.

ஒடிசா
ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ஹரிபூர் கிராமத்தில் தான் இந்தக் கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இந்த கிராமம் ஒடிசா மாநிலத் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அங்குப் பிரிட்டனின் புதிய மன்னரின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக அங்குள்ள கோபிநாத் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனைகள், யாகங்கள் நடந்தன.

என்ன காரணம்
எங்கோ இருக்கும் பிரிட்டனிற்கு அரசரான சார்லஸ் பதவியேற்றதற்கு இந்த கிராமம் ஏன் கொண்டாடுகிறது எனக் கேட்கிறார்களா? ஏனென்றால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்திற்கு அப்போது இளவரசராக இருந்தவரும் புதிய மன்னருமான சார்லஸ் வருகை தந்துள்ளார். அப்போது அவருக்கு வயது வெறும் 32 தான். இந்தச் சம்பவம் நடந்த 40 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், இதை மறைக்காமல் சார்லஸுக்காக கொண்டாடித் தீர்த்து உள்ளனர் இந்த ஒடிசா கிராமத்தினர்.

கிராமத்திற்கு விசிட்
அப்போது முதல்வராக இருந்த ஜே பி பட்நாயக், இளவரசர் சார்ல்ஸை அரசு விருந்தினராக அறிவித்து முழு மரியாதை கொடுத்தார். இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவரான சஞ்சய் பதி கூறுகையில், "எங்கள் கிராமத்திற்கு வந்த சார்லஸ் இளநீர் குடித்தார். நாங்கள் எப்படி மரத்தில் ஏறி இளநீர் பறிக்கிறோம் என்பதை ஆர்வமாகப் பார்த்தார், கூடை நெசவிலும் நெல் அறுவடை செய்யும் முறையையும் அவர் ஆர்வமாகப் பார்த்தார்.

கிராமத்திற்கு விசிட்
அப்போது முதல்வராக இருந்த ஜே பி பட்நாயக், இளவரசர் சார்ல்ஸை அரசு விருந்தினராக அறிவித்து முழு மரியாதை கொடுத்தார். இது குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் முதியவர் ஒருவரான சஞ்சய் பதி கூறுகையில், "எங்கள் கிராமத்திற்கு வந்த சார்லஸ் இளநீர் குடித்தார். நாங்கள் எப்படி மரத்தில் ஏறி இளநீர் பறிக்கிறோம் என்பதை ஆர்வமாகப் பார்த்தார், கூடை நெசவிலும் நெல் அறுவடை செய்யும் முறையையும் அவர் ஆர்வமாகப் பார்த்தார்.

எளிமை
மற்றொரு கிராமவாசியான சித்தரஞ்சன் பாண்டா கூறுகையில், "எனக்கு அப்போது 12 வயது தான். 1980இல் அவர் இங்கு வந்தார். ஆனால், இப்போது வரை மக்கள் அது குறித்துப் பேசுவதைக் கேட்டுள்ளேன். அவர் உள்ளூர் மக்களுடன் எப்படிப் பழகினார் என்பதை நினைவு கூர்வார்கள். அவர் மிகவும் எளிமையாகவே இருந்தார். இதனால் தான் அவர் இப்போது மன்னராகியதைக் கொண்டாடினோம்" என்றார்.

கொண்டாட்டம்
என்றோ வந்த சார்லஸ் இளவரசரின் வருகையை இத்தனை ஆண்டுகள் கழித்தும் மறக்காமல், அவரது பதவியேற்பை ஒடிசா மக்கள் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அந்த காலகட்டத்தில் ஒடிசா பயணத்தில் சார்லஸ் புவனேஸ்வரில் உள்ள முக்தேஷ்வர் கோவிலுக்கும் சார்லஸ் சென்றிருந்தார். அது 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவபெருமான் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications