Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது புதுசு.. இந்தியாவில் வேகமெடுத்த ‛எக்ஸ்பிபி 1.16 வைரஸ்’.. கொரோனா அதிகரிக்க என்ன காரணம்? அலர்ட்

இந்தியாவில் திடீரென்று கொரோனா பாதிப்பு அதிகரிக்க எக்ஸ்பிபி 1.16 வகை வைரஸ் தான் முக்கிய காரணமாக உள்ளது. இது ஓமிக்ரான் வைரஸின் ஒருங்கிணைந்த வடிவமாக உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதன்கிழமை மத்திய சுகாதாரத்துறையின் கணக்கின்படி 137 நாட்களில் இல்லாத வகையில் நாட்டில் புதன்கிழமை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரிப்பின் பின்னணியில் ஓமிக்ரானின் எக்ஸ்பிபி 1.16 புதிய வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த வைரஸ் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அங்கிருந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவி ஒட்டுமொத்த உலகத்தையும் அடுத்த 2 ஆண்டுகளுக்கு முடக்கி போட்டது. தற்போது பெரும்பலான நாடுகளில் கொரோனா பரவல் என்பது குறைந்து கட்டுக்குள் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் என்பது கொரோனா தடுப்பூசியாகும். இருப்பினும் கூட தொடர்ந்து பல நாடுகளில் கொரேனா வைரஸ் மரபணுவை மாற்றி புதுபுது ரூபத்தில் மக்களை தாக்கி வருகிறது. இதில் சில வைரஸ்கள் வீரியம் குறைந்து இருக்கும் வேளையில் சில வைரஸ்கள் வீரியம் கொண்டதாக உள்ளன.

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி இந்தியாவில் 1,134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 137 நாட்களில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5 பேர் பலியாகினர். சத்தீஸ்கர், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பலி பதிவாகி உள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு என்பது 5 லட்சத்து 30 ஆயிரத்து 813 என்ற அளவில் உள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா நோய் பாதிப்பு உறுதி செய்வது 0.98 சதவீதம் என இருந்த நிலையில் தற்போது 1.09 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி ஆலோசனை

இதனால் இந்தியாவில் கொரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இன்று கொரோனா தடுப்பு தொடர்பாக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது டெஸ்ட், ட்ரக், கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்பட 5 வகையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிப்பது தொடர்பான Mock Drils மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.

 எக்ஸ்பிபி 1.16 வகை வைரஸ்

எக்ஸ்பிபி 1.16 வகை வைரஸ்

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்பது புதிய வைரஸ் ஒன்று தான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது இந்தியாவில் தற்போது எக்ஸ்பிபி வகை வைரஸ் தான் பரவி வருகிறது. எக்ஸ்பிபி வைரஸ் என்பது ஓமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸ்களாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்பிஎப், பிஏ5.2.3 மற்றும் பிஏ2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என கூறப்படுகிறது.

9 மாநிலங்களில் பரவல்

9 மாநிலங்களில் பரவல்

இந்தியாவில் வைரஸின் மரபணு மாற்றத்துடன் எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்கள் பரவி வருகின்றது. இந்த வைரஸ்கள் தான் நிறைய பேரை தற்போது பாதித்து வருகின்றது. எக்ஸ்பிபி 1.16 வைரஸ் வேகமாக பரவ கூடியதாக இருகிறது. சாதாரணமாக தும்மல் போட்டாலே அது மிக எளிதாக மற்றவர்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளது. தற்போது தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், டெல்லி, புதுச்சேரி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஒடிசாவில் இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெலங்கானா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வகை வைரஸ்களின் பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது.

 14 நாடுகளில்

14 நாடுகளில்

இந்த எக்ஸ்பிபி வைரஸ் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பரவுகிறது. தற்போது உலகம் முழுவதும் 14 நாடுகளில் இந்த மரபணு மாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்பிபி 1.16 வைரஸ் என்பது எக்ஸ்பிபி 1.15 வைரஸை விட அதிக வீரியத்துடன் உள்ளது. இந்த மாத நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படவர்களில் 30 சதவீதம் பேரை எக்பிபி 1.16 வகை வைரஸ் தான் தாக்கி உள்ளது. ஓமிக்ரானின் மறுவடிமாக கருதப்படும் இந்த வைரஸ் வேகமாக பரவினாலும் கூட ஓமிக்ரானை போல் பயப்படும் வகையில் மோசமான நிலையை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+