Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 மணி நேரம் நடந்த மீட்டிங்! நள்ளிரவில் அதிரடி காட்டிய அமைச்சர்! மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் ஓவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருக்கும் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திடீரென டெல்லியில் போராட்டத்தைத் தொடங்கினர். பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் சீண்டல்கள் நடப்பதாகக் குற்றச்சாட்டினர்.

தற்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அடுக்கடுக்கான குற்றச்சடுகள் முன்வைத்தனர். மேலும், லக்னோவில் உள்ள தேசிய முகாமிலும் பெண் வீராங்கனைகளிடம் அத்துமீறல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.

போராட்டம்

போராட்டம்

இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக், காமன்வெல்த் சாம்பியன் வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி ஜந்தர்மந்தர் சாலையில் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்தச் சம்பவத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகமும் தலையிட்டது.

7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை

7 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தைத் தொடரப்போவதாக வீரர்கள் அறிவித்தனர். இதனிடையே நேற்று மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வீரர், வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

தனி குழு அமைப்பு

தனி குழு அமைப்பு

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேரி கோம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. விசாரணை முடிவடையும் வரை, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தினசரி பணிகளைக் கவனிக்கத் தனியாக புது குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விலகுவார்

விலகுவார்

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவர் மீதான விசாரணை நிறைவடையும் வரை இந்திய மல்யுத்த அமைப்பில் இருந்து நான்கு வாரங்களுக்கு அவர் விலகுவார் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு நன்றி தெரிவித்த அனுராக் தாக்கூர், அவர்களின் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் அரசு நிச்சயம் அவர்களுடன் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் கருத்து

அமைச்சர் கருத்து

அவர் மேலும் கூறுகையில், "இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளோம். அவர்கள் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி அடுத்த நான்கு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். பாலியல் அத்துமீறல் அல்லது நிதி முறைகேடு என எந்தக் குற்றச்சாட்டையும் நாங்கள் விரிவாக ஆராய்ந்து விசாரணை செய்ய உள்ளோம். அந்த குழு அளிக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுவார்த்தைக்கு வந்த வீரர், வீராங்கனைகளுக்கு நன்றி" என்று அவர் தெரிவித்தார்.

போராட்டம் வாபஸ்

போராட்டம் வாபஸ்

மத்திய அமைச்சருடனான இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வீரர், வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறுகையில், "மல்யுத்த வீரர்களுடன் அரசு எப்போதும் துணை நிற்கும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் எப்போதும் எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்" என்று தெரிவித்தார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்திய ஒலிம்பிக் சங்கம் இது குறித்து விசாரணை செய்ய மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணையைக் குழுவை அமைத்துள்ளது. அதேநேரம் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் ஷரண் சிங் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த பொய்யான புகார்களுக்காகப் பதவி விலக முடியாது என்றும் தெரிவித்த அவர், தான் வாயைத் திறந்தால் இங்கு மிகப் பெரிய சுனாமியே வரும் என்றும் யாருக்கோ எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+