உலகின் மிக பெரிய கோயில் அங்கோர்வாட்! தமிழ் மன்னர் கட்டிய கோயிலை.. கையில் எடுக்கும் மத்திய அரசு
டெல்லி: வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உலகின் மிகப் பெரிய கோயிலான அங்கோர்வாட் குறித்தும் அங்கு இந்தியா செய்து வரும் பணிகள் குறித்தும் விளக்கினார்.
இந்தியா நாகரீகத்தின் தடயங்கள் என்பது இந்தியத் துணைக் கண்டத்தையும் தாண்டி சில இடங்களில் தென்படவே செய்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தான் உலகின் மிகப் பெரிய கோயிலான அங்கோர்வாட். இந்த பெரிய கோயில் வளாகம் இந்தியாவில் இல்லை.
இந்தியாவில் இருந்த வெகு தொலைவில், அதாவது கம்போடியாவில் தான் இந்த கோயில் உள்ளது. அங்கோர்வாட் என்றாலே கோவில்களின் நகரம் என்று தான் அர்த்தம் அந்தளவுக்குப் பெரிய கோயில்களைக் கொண்ட ஊர் தான் இது.

அங்கோர்வாட்
இந்த அங்கோர்வாட் பல நூற்றாண்டுகளாக யாருடைய கண்களிலும் படாமல் புதைந்தே இருந்தது. இதை 1860ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் கண்டுபிடித்தார். அப்போது இந்தக் கோயில் மோசமான நிலையில், இடிபாடுகள் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால், அதன் பிறகு இந்த அங்கோர்வாட் புகழ் உலகெங்கும் பரவியது. அதைத் தொடர்ந்து கோயில்களில் ஓரளவுக்கு மறுசீரமைப்பு பணிகளும் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் இந்த கோயில்களின் நகரத்தைச் சுற்றிப் பார்க்க வருகிறார்கள்.

தமிழ் மன்னர்
மத ரீதியாக அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கட்டுமானங்களில் ஒன்றாக இந்த அங்கோர்வாட் கருதப்படுகிறது. இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பல்லவ வம்ச மன்னர்களில் ஒருவரான இரண்டாம் சூரிய வர்மன் என்ற மன்னர் தான் இந்த அக்கோர்வாட்டை கட்டியுள்ளார். அப்பகுதியை ஆண்ட மிக முக்கிய மன்னர்களில் ஒருவராக இரண்டாம் சூரிய வர்மன் கருதப்படுகிறார். இதற்கிடையே அங்கோர்வாட் குறித்தும் உலகில் உள்ள பிற முக்கிய கோயில் மறுசீரமைப்பு குறித்தும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அங்கோர்வாட் மறுசீரமைப்பு
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அங்கு சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதலில் கோயில்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய ஜெய்சங்கர், "இந்தியாவுக்குத் தொன்மையான நாகரீகம் உள்ளது. இதனால் உலகின் மற்ற இடங்களில் உள்ள பழமையான கோயில்களை மறுசீரமைப்பு செய்ய இந்தியாவும் உதவுகிறது. அதன் ஒரு பகுதியாக கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் வளாகத்தை இந்தியா மறுசீரமைத்து வருகிறது.

சீனா, தென் கொரியா
கடந்த காலங்களில் நான் சீனாவுக்கான தூதராக சில ஆண்டுகள் இருந்துள்ளேன். இன்னுமே கூட சீனாவின் கிழக்குக் கடற்கரையில் இந்துக் கோவில்களின் சில பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். அதேபோல தென் கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பண்டைய காலத்தில் இருந்தே தொடர்புகள் உள்ளன. இதன் காரணமாகவே அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதில் கொரியர்கள் ஆர்வமாக உள்ளனர். 13ஆம் நூற்றாண்டில் இந்திய இளவரசி ஒருவர் கொரிய இளவரசரைத் திருமணம் செய்ய அயோத்தியில் இருந்து பயணம் செய்ததாகக் கொரியாவில் புராணக்கதையே இருக்கிறது.

இந்து கோயில்கள்
ஒரு காலத்தில் இந்தியாவுடன் ஆழமான உறவை கொண்டிருந்த நாடுகளில் இருக்கும் கோயில்களை மீட்டெடுப்பதற்கும் கட்டுவதற்கும் இந்திய இப்போது உதவுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பெருமை நிலைநாட்டப்படுகிறது. நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோயில் கட்டியுள்ளோம். பஹ்ரைனில் கோயில் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. வியட்நாமிலும் பல பணிகளைச் செய்துள்ளோம். நேபாளத்தில் ராமாயண சுற்று வட்டத்தை அமைக்க 200 கோடி ரூபாய் வழங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா
இலங்கையில் 12 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திருக்கேதீஸ்வரம் கோயிலை மறுசீரமைப்பதிலும் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. சர்வதேச அளவில் இந்தியா இப்போது முக்கிய இடத்தை அடைந்துள்ளது. அதற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டும் காரணமில்லை. இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவுகளை இதுபோல மீட்டுருவாக்கம் செய்வதும் முக்கிய காரணம். இப்போது 3.2 கோடி இந்தியர்கள் வசிக்கும் அமெரிக்காவில் கூட 1000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

அமைச்சர் ஜெய்சங்கர்
கோயில்கள் மத வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும், சமூக உணர்வை நிறுவுவதற்கும் ஒரு காரணமாக உள்ளது. 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா போன்ற தேசம் குறித்து வெளிநாட்டவர் அறிந்து கொள்ளவும் இது உதவுகிறது. தென்கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளுடனான தனது பழங்கால உறவு உறுதி செய்யும் விதமாகவும் மேற்குலக நாடுகளுடன் நவீன உறவுகளை உருவாக்கவும் முயற்சியாகவும் இப்படி பழங்கால கோயில்களைப் புதுப்பிப்பதிலும் புதிய கோயில்களைக் கட்டும் முயற்சியிலும் இந்தியா இறங்கியுள்ளது" என்றார்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
பரிதாபமாக சீரழியும் பாகிஸ்தான்.. இப்படியொரு நிலைமை ஏற்பட்டதே இல்லை.. ரொம்பவே மோசம்! -
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications