"பெகாசஸ், ரபேல், பணமதிப்பு நீக்கம்.." சரமாரியாக வந்த கேள்வி.. பட்டுனு பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்
டெல்லி: வரும் காலங்களில் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. இருந்த போதிலும், மக்களவை தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பல்வேறு கட்சிகளும் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டன.
அதற்கு முன்பு இந்தாண்டு மட்டும் 9 மாநிலங்களில் வரிசையாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கர்நாடகா, திரிபுரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது.

பாஜக
> எந்தவொரு மாநிலத்திலும் தோல்வியைத் தழுவக் கூடாது என்பதே பாஜகவின் எண்ண��். எந்த மாநிலத்தில் தேர்தல் என்றாலும் அதற்குப் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே தேர்தல் பணிகளை பாஜக தொடங்கிவிடும். குஜராத் தேர்தல் முடிந்த கையோடு கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். இதனிடையே நேற்றைய தினம் டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

9 மாநில தேர்தல்
இந்த 9 மாநில தேர்தல்களுக்கு 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது.. இதற்கான திட்டத்தை வகுக்க டெல்லியில் இரு நாட்கள் நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளத் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி மெகா பேரணியை நடத்தினார். இதில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டனர். இதுவே பாஜகவுக்கு உற்சாகத்தைத் தருவதாக அமைந்தது. வரும் காலத்தில் பல மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அது குறித்து இதில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக செயற்குழு கூட்டம்
பாஜகவின் இந்த செயற்குழு கூட்டத்தில் பிரதமர் தவிர, 35 மத்திய அமைச்சர்கள், 12 முதல்வர்கள் மற்றும் 37 மண்டல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மேலும், சுமார் 350 கட்சி தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தக் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் பதிலளித்தார்.

நிர்மலா சீதாராமன் என்ன சொன்னார்
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பெகாசஸ், ரபேல், அமலாக்கத் துறை, சென்ட்ரல் விஸ்டா, இட ஒதுக்கீடு, பணமதிப்பு நீக்கம்... இவை குறித்துத் தான் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் பிரதமரைக் குற்றஞ்சாட்டினர். ஆனால், அவற்றைப் பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமாக நீதிமன்றத்தில் எதிர்கொண்டார்" என்றார். தொடர்ந்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், "இந்தியா பல்வேறு விஷயங்களில் கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. மொபைல், கார் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்துள்ளது.

5ஆவது பெரிய பொருளாதாரம்
பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.. மொபைல் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 2013-14 காலகட்டத்தில் மொபைலை நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம்.. ஆனால், 10 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. உலக நாடுகளுக்கு மொபைலை நாம் இப்போது ஏற்றுமதி செய்கிறோம். வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அனைத்து இடங்களில் பூத் அளவில் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

பாஜக
அடுத்து மக்களவை தேர்தலுக்கு பணிகளைத் தொடங்கிவிட்டோம்.. பாஜக பலவீனமாக இருக்கும் 100 தொகுதிகளை அடையாளம் கண்டு.. அங்கு 72 ஆயிரம் பூத்களை அமைத்துள்ளோம்.. இதன் மூலம் ஆதரவை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது தவிர நாடு முழுக்க 1.3 லட்சம் பூத்களை அமைத்துள்ளோம். இதன் மூலம் நாங்கள் ஏற்கனவே பாஜகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல தொடங்கிவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications