நிதிஷ் + சந்திரபாபு ஆதரவுக்கு.. மோடி என்ன விலை கொடுக்க நேரிடும்! நொடிக்கு நொடி மாறும் டெல்லி களம்
டெல்லி: மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவு கட்டாயம் என்ற சூழல் உருவாகி இருக்கும் நிலையில், இதற்கு பாஜக என்ன விலை கொடுக்க வேண்டி இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கணித்திருந்த போதிலும் லோக்சபா தேர்தல் முடிவுகள் அதற்கு நேர்மாறாகவே இருந்துள்ளது.

இருப்பினும், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், அது ஜேடியு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.
இரு பெரும் தலைவர்கள்: 232 இடங்களை வென்ற எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரை தங்கள் கூட்டணிக்கு அழைக்க முயன்றதாகவும் இருப்பினும், அவர்கள் என்டிஏ கூட்டணியிலேயே தொடர முடிவு செய்துவிட்டனர். பாஜக இந்த முறை 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை விட 32 சீட் குறைவாகும். தெலுங்கு தேசம் மற்றும் ஜேடியு கட்சிகளிடம் மொத்தமாக 28 சீட்கள் இருப்பதால் அது முக்கியமானதாக மாறுகிறது.
ஆனால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் என இருவருமே ஒன்றும் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் இல்லை.. பல காலமாக அரசியலைப் பார்த்தவர்கள்.. 1990களில் தேசிய அரசியலைத் தீர்மானித்த முக்கிய தலைவர்கள். இருவருக்குமே தங்களுக்கு வேண்டியதை மத்தியில் இருந்து எப்படிப் பெற வேண்டும் என்பது நன்கு தெரியும்..
மிஸ் செய்ய மாட்டார்கள்: பாஜக தனித்து பெரும்பான்மையைப் பெற்று இருந்தால் பிராந்திய கட்சிகளுக்கு வாய்ப்பே இருந்து இருக்காது. ஆனால், இப்போது பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இது பிராந்திய கட்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது.. குறிப்பாக இந்த இரு பெரும் அனுபவமிக்க தலைவர்கள் நிச்சயம் அந்த வாய்ப்பை தவறவிட மாட்டார்கள்.
நிதிஷ் தரப்பு: ஒரு பக்கம் பீகாருக்கு Special Category Status கேட்கிறது நிதிஷ் தரப்பு.. பீகாரில் வேலையின்மை அதிகமாக இருக்கும் நிலையில், இந்த Special Category Status பெரியளவில் உதவும் என்கிறது நிதிஷ்குமார் தரப்பு. அதேபோல3 மத்திய அமைச்சர்கள், 2 இணை அமைச்சர்கள் பொறுப்பையும் நிதிஷ் தரப்பு கேட்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்து மிக மிக முக்கியமானது சாதி வாரிக் கணக்கெடுப்பு.. பீகாரில் இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பை வைத்தே நிதிஷ்குமார் கடந்த சில காலமாக அரசியல் செய்து வருகிறார். பீகார் அரசு இது தொடர்பான மக்கள்தொகை தகவல்களை வெளியிட்ட போதிலும், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, இந்த விவகாரத்திலும் குறிப்பாக தேசியளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ் தரப்பு அழுத்தம் தரும் எனக் கூறப்படுகிறது. இந்த இரண்டு குறித்தும் ஜேடியுவின் கே.சி. தியாகி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.
நாயுடு தரப்பு: அதேநேரம் சந்திரபாபு நாயுடு தரப்பில் இருந்து எந்த தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து எதுவுமே சொல்லவில்லை. அதேநேரம் கடந்த இரு நாட்களாகவே அவர் முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதில் முக்கியமானது ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து.. தெலுங்கானாவைத் தனி மாநிலமான பிரித்த பிறகு ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்பதை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சொல்லப்போனால் 2016இல் அவர் என்டிஏவில் இருந்து வெளியே வர இது முக்கிய காரணம்.
இப்போது என்டிஏ கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக சந்திரபாபு நாயுடு இருப்பதால் அவர் சிறப்பு அந்தஸ்தை நிச்சயம் வாங்கிவிடுவார் என்றே கூறப்படுகிறது. மேலும், ஆந்திர தலைநகராக அமராவதியை உருவாக்கவும் கூடுதல் நிதியைக் கேட்டுப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல 2 மத்திய அமைச்சர்கள், 3 இணை அமைச்சர்கள் பொறுப்பையும் சந்திரபாபு நாயுடு தரப்பு கேட்பதாகக் கூறப்படுகிறது.
அழுத்தம் இருக்கும்: இரு தரப்பும் கேட்பதை பாஜக கொடுத்துவிட்டாலும் கூட இந்த இரு தலைவர்களும் 5 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆதரவு தந்துவிடுவார்கள் எனச் சொல்ல முடியாது. பாஜகவுக்கு எப்போதும் அழுத்தம் கொடுத்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications