மிசோரம்.. பைட்டர் ஜெட்களை இறக்கிய இந்திரா அரசு! லோக்சபாவில் பிரதமர் மோடி பரபர! 1966இல் என்ன நடந்தது
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று பேசும் போது, வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் நடத்திவிட்டு காங்கிரஸ் மக்களுக்குப் பொய் சொன்னதாகக் கூறியிருந்தார். உண்மையில் அப்போது என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பிரதமர் மோடி நேற்று பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் வடகிழக்கு மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சியில் எப்படி இருந்தது என்பது குறித்து கடுமையாகச் சாடி பேசினார்.

குறிப்பாக 1966 ஆம் ஆண்டில் மார்ச் 5ஆம் தேதி இந்திய விமானப்படை மிசோரம் மாநிலத்தில் நடத்திய தாக்குதலையும் அவர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் சில காட்டமாகக் கருத்துகளை முன்வைத்திருந்தார்.
பிரதமர் மோடி: மேலும் பிரதமர் மோடி கூறுகையில், "வேறு எந்த நாட்டில் தாக்குதல் நடத்தியிருந்தாலும் ஓகே.. ஆனால் இந்தியாவுக்குள் தாக்குதலை நடத்தினர். மிசோரம் மக்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்.. அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்.
இன்று வரை மிசோரம் மாநிலத்தில் மார்ச் 5ஆம் தேதி துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட அந்த காயங்களைப் போக்கக் காங்கிரஸ் முயலவில்லை. இந்த உண்மையைக் காங்கிரஸ் நாட்டுக்கு மறைத்தது. மக்களிடம் உண்மையைச் சொல்லவில்லை.. அப்போது ஆட்சி செய்தது யார் தெரியுமா? இந்திரா காந்தி" என்று அவர் சாடினார். அவர் அப்படிக் கூறியது எதனால். அங்கு அப்போது என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
மிசோரம் விவகாரம்: 1960களில், மிசோ மலைகள் அசாமின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது 1959இல் மிசோ ஹில்ஸ் மாவட்டத்தில் மூக்கில் மரங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அழியும் மௌதம் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். அதைத்த தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு மிசோ தேசிய பஞ்ச முன்னணி அதாவது Mizo National Famine Front என்ற பெயரில் ஒரு நிவாரண அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்கள் தொலைதூர கிராமங்களுக்கும் சிறப்பான வகையில் உணவுப் பொருட்களை அனுப்பினர்.
1961இல் பஞ்சம் முடிவுக்கு வந்த பிறகு, இந்த அமைப்பின் பெயரில் இருந்து பஞ்சம் என்ற வார்த்தையை நீக்கி.. மிசோ நேஷனல் ஃப்ரண்ட் (MNF) என்ற அமைப்பைத் தொடங்கினார். தொடக்கத்தில் அங்குள்ள தலைவர்களின் நோக்கம் மாறுபட்டு இருந்தன. ஒரு சிலர் மிசோரம் தனி மாநிலம் ஆக்கப்பட வேண்டும் என்றார்கள். ஒரு சிலர் தனி நாடே தேவை என்றார்கள்.
எப்படி தொடங்கியது: பின்னர், மிசோ மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி ஒரு நாடு தேவை என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர். இப்படி தான் 'கிரேட்டர் மிசோரம்' இயக்கம் தொடங்கியது. இதில் இந்த அமைப்பின் நிறுவனர் லால்டெங்கா முக்கிய நபராக இருந்தார். அவர் மிசோ மக்கள் அதிகம் இருக்கும் மணிப்பூர், பர்மாவின் மிசோ-ஆக்கிரமிப்புப் பகுதிகளில் சென்று பிரச்சாரம் செய்தார். ஆரம்பத்தில் இவர்கள் அமைதியான முறையில் போராடினாலும், சிலர தவிர்க்க முடியாத காரணங்களால் வன்முறை பாதைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.
அப்போது 1966 பிப்ரவரி 28இல் இவர்கள் ஆபரேஷன் ஜெரிகோவை ஆரம்பித்தனர். மிசோரமில் உள்ள இந்தியப் படைகளையா அகற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது. இவர்கள் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அசாம் மாநிலத்தில் இருந்து மிசோ மக்கள் வசிக்கும் வைரெங்டேயில் கிராமத்திற்கும் இடையே இருக்கும் சாலையில் பெரிய பெரிய மரங்களை வெட்டி போட்டார்கள். மறுநாள் 1966 மார்ச் 1ஆம் தேதி மிசோரம் சுதந்திரம் அடைந்ததாக அறிவித்தார்கள்.
4 பைட்டர் ஜெட்கள்: இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இந்த பகுதி அசாம் மாநிலத்திற்குள் வந்தது. எனவே, மிசோ மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் கலவரம் நிறைந்த பகுதியாக அறிவித்த அசாம் அரசு, மறுநாள் மார்ச் 3ஆம் தேதி இந்திய ராணுவத்தின் உதவியைக் கேட்டது. கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள பல கிராமங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தனர். அப்போது நடந்த சம்பவம் தான் மிசோ நேஷனல் ஃப்ரண்ட் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது பிரமதராக இருந்த இந்திரா காந்தி கிளர்ச்சியாளர்களை முறியடிக்க நான்கு பைட்டர் ஜெட்களை அனுப்பினார். ஐஸ்வால் உள்ளிட்ட பகுதிகளை அவர்கள் தாக்கியுள்ளனர். ஐஸ்வால் உள்ள பகுதிகளில் மார்ச் 5ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்திய இவர்கள், அதன் பிறகு குண்டுகளையும் வீசினர்.

குண்டு மழை: இது குறித்து அப்போது மிசோ தேசிய முன்னணியில் இருந்த தங்கசங்கா கூறுகையில், "எங்கள் சிறிய நகரம் திடீரென ஜெட் போர் விமானங்களால் சுற்றி வளைக்கப்பட்டது. திடீரென குண்டு மழை பொழிந்தன. கட்டிடங்கள் தரைமட்டமானது. அவை மிசோராமின் இதயத்தைத் தாக்கின. ஆனால், நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இதே மத்திய அரசு இந்தோ சீனா பார் வந்த போது விமானத்தைச் சீனாவுக்குள் அனுப்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
மார்ச் 13 ஆம் தேதி வரை இந்த சண்டை தொடர்ந்தது. அப்போது அங்கிருந்த மக்கள் அஞ்சி மலைகளில் தஞ்சம் புகுந்தனர். மிசோ முன்னணி கிளர்ச்சியாளர்கள் மியான்மார் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (இப்போது வங்கதேசம்) பகுதிகளுக்குச் சென்றனர். இதில் மொத்தம் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். அசாவாலின் நான்கு முக்கிய பகுதிகள் குடியரசு வெங், ஹ்மெய்ச்சே வெங், டவர்புய் வெங் மற்றும் சிங்கா வெங் - முற்றிலும் அழிக்கப்பட்டன.
என்ன காரணம்: முன்பே குறிப்பிட்டது போல ஐஸ்வால் பகுதிக்குச் செல்லும் பாதையை மரங்களை வெட்டி மறித்தனர். மேலும், அங்குள்ள பல ஊர்களைக் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும், லுங்கிலி என்ற பகுதியில் இருந்த அசைம் சைரபிள் வீரர்களை 1000 பேர் கொண்ட கிளர்ச்சி படைகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், முதலில் அங்கிருந்த அசைம் ரைபிள்ஸ் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களை அனுப்ப முயன்றுள்ளனர். இருப்பினும், அது சுட்டு வீழ்த்தப்பட்டதால் வேறு வழியின்றி விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொய் சொன்னார்களா: இந்தியாவின் ஒரு பகுதிகள் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சைக்குரிய சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.. இதைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி பேசியிருந்தார். மோடி தனது உரையில் காங்கிரஸ் உண்மையை நாட்டிற்கு மறைத்தாக தெரிவித்திருந்தார்.
அதாவது 1966 மார்ச் 9ஆம் தேதி இந்திரா காந்தி மிசோ பகுதியில் வீரர்கள் மற்றும் பொருட்களை அனுப்பவே போர் விமானங்கள் சென்றுள்ளதாகவும் குண்டு வீசி தாக்குதல் நடத்த இல்லை எனக் கொல்கத்தாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். இதைக் குறிப்பிட்டே பிரதமர் உண்மையை மறைத்தாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications