"அகண்ட பாரதம் உண்மைதான்.." ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொன்ன அந்த வார்த்தை! உற்று பார்த்த கூட்டம்
டெல்லி: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது தவறு என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அகண்ட பாரதம் குறித்தும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிலைமை இருந்து வருகிறது. பொருளாதார ரீதியாக அந்நாட்டு மக்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நிலைமையை மேம்படுத்த அவர்கள் வேறு வழியில்லாமல் உலக வங்கியிடம் உதவியும் கேட்டுள்ளனர். உதவி செய்ய உலக வங்கி மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இதனால் விலைவாசி மேலும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான்
அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் அங்கு மக்கள் மிகக் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் இளைஞர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி இருந்தது. அதில் பாகிஸ்தானிலும் மோடியை போல ஒருவர் பிரதமராக வந்திருந்தால் தங்கள் இந்தளவுக்குப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்க மாட்டோம் என்று கூறி கதறி அழுவார். இந்த வீடியோ பாக். மக்கள் எந்தளவுக்கு மோசமான சூழலில் உள்ளனர் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

மோகன் பகவத்
இதனிடையே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இது குறித்து சில தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 70 ஆண்டுகளுக்கு மேலாகச் சுதந்திரம் அடைந்த பிறகும் பாகிஸ்தானில் உள்ள மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதாக தெரிவித்த அவர், பிரிவினை என்பது மாபெரும் தவறு என்றும் இப்போது இந்தியாவில் இருப்போர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பாகிஸ்தானில் இருப்பவர்கள் கவலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். புரட்சியாளர் ஹேமு கலானியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த விழாவில் மோகன் பகவத் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மக்கள்
அவர் மேலும் கூறுகையில், "சுதந்திரத்திற்கு முன்பு வரை அது முன் பாரதம் என்றே இருந்தது.. சிலர் பிடிவாதமாகப் பாரதத்தை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அப்படிப் பிரிந்து சென்றவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கே வலி தான் இருக்கிறது பாகிஸ்தானை மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.. இந்தியாவில் உள்ளவர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர். அகண்ட பாரதம் என்பது உண்மைதான். உண்மையாக அகண்ட பாரதம் இருந்தது. ஆனால் பிளவுபட்ட பாரதம் ஒரு மோசமான கனவாக முடிந்துள்ளது. நாம் எப்போதும் நிகழ்ச்சியாக இருக்க புதிய இந்தியாவைக் கட்டமைக்க வேண்டியது கட்டாயம்.

அகண்ட பாரதம்
அகண்ட பாரதம் (அதாவது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலதீவுகள், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் திபெத் என அனைத்து பண்டைய பகுதிகளையும் கொண்ட நாடு) உண்மையாக இருந்தது. அதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கசப்பான உறவு இருக்கிறது. அதற்காகப் பாகிஸ்தானை நாம் தாக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. நாம் மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை.

பதிலடி
நாங்கள் தற்காப்புக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வருகிறோம்.. அதற்காக எப்போதும் அமைதியாக இருப்போம் என்று சொல்ல முடியாது. நாட்டிற்கு ஆபத்து என்றால் எல்லை தாண்டி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலையும் நாங்கள் நடத்துவோம். அதற்கும் ரெடியாக இருக்கிறோம். பாகிஸ்தான் மக்களே இப்போது பாரதத்தைப் பிரித்தது தவறு என்று கூறுகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி பலரும் அதே கருத்தைத் தான் சொல்கிறார்கள்" என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications