மல்யுத்த வீரர்கள் போராட்டம்! "மவுனத்திற்கு" உண்மையில் என்ன காரணம்.. சாக்ஷி மாலிக் பரபர வீடியோ
டெல்லி: பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வந்த நிலையில், இது குறித்து சாக்ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்கள் கடந்த ஜன. மாதம் முன்வைக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யவே வீரர்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடர வேண்டி இருந்தது.
இப்போது பிரிஜ் பூஷன் மீதான வழக்கு விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் தீவிரமாகப் போராடி வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அமித் ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

போராட்டம்: இதற்கிடையே போராட்டத்தை முன்னின்று நடத்தும் வீராங்கனைகளில் ஒருவரான சாக்ஷி மாலிக் போராட்டம் குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை சாக்ஷி மாலிக் தனது கணவரும் மல்யுத்த வீரருமான சத்யவர்த் காடியன் உடன் இணைந்து வெளியிட்டுள்ளார். தங்களது போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும் கடந்த காலங்களில் மல்யுத்த வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததாலேயே பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல்களை வீராங்கனைகள் வெளியே சொல்லவில்லை எனத் தெரிவித்தார்.
போராடும் வீரர், வீராங்கனைகளைச் சுத்தி பொய்யான தகவல்களைச் சிலர் திட்டமிட்டுப் பரப்புவதாகவும் தங்களை அழிக்க முயல்வதாகவும் சாக்ஷி மாலிக் கணவர் காடியன் தெரிவித்துள்ளார்.சக்ஷி மாலிக், வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி மல்யுத்த வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் எதிராகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி ஜந்தர் மந்தரில் இவர்கள் நடத்தி வந்த போராட்ட களத்திற்கே நேரடியாக வந்து பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் ஆகியோர் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனுமதி பெற்றே போராட்டம்: இது குறித்து சத்யவர்த் காடியன் கூறுகையில், "எங்கள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது இல்லை. ஜனவரியில் நாங்கள் ஜந்தர் மந்தரில் ஜனவரி மாதம் உரிய அனுமதி பெற்றே போராட்டம் நடத்தினோம்" என்றார். மேலும், அப்போது பெறப்பட்ட அனுமதிக் கடிதத்தையும் சாக்ஷி மாலிக் அந்த வீடியோவில் காட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த போராட்டத்தின் பின்னால் காங்கிரஸ் எல்லாம் இல்லை. கடந்த 10-12 ஆண்டுகளாக இந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்ந்து நடந்து வருகிறது. இது 90% மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே தெரியும். அப்போதே ஒரு சிலர் இது குறித்து குரல் எழுப்பி இருந்தனர். இருப்பினும், அப்போது அனைவரும் ஒற்றுமையாக இல்லை.
அதனால் அப்போது எங்களால் பெரியளவில் குரல் கொடுக்க முடியவில்லை. எங்கள் போராட்டம் பிரிஜ் பூஷனுக்கு எதிரானது தானே தவிர மத்திய அரசுக்கு எதிரானது இல்லை" என்றார். சாக்ஷி மாலிக்கும் இதைக் கருத்தே கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "மைனர் சிறுமி தனது வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றது நடந்துள்ளது. அவரது குடும்பம் மிரட்டப்பட்டது. மல்யுத்த வீரர்கள் ஏழைக் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். சக்திவாய்ந்த மனிதனை எதிர்ப்பது அவ்வளவு எளிதானது இல்லை. வீரர்கள் அப்போது ஒற்றுமையாக இல்லாமல் போனதாலேயே எங்களால் குரல் கொடுக்க முடியவில்லை" என்றார்..

போலீசார்: மேலும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது விவசாய சங்கத்தினர் நடத்தவிருந்த மகா பஞ்சாயத்தில் கலந்து கொள்ளவே தாங்கள் சென்றதாகவும் இருப்பினும் அனுமதி பெறவில்லை என்று கூறி தங்களை போலீசார் தாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போலீசார் தங்களிடம் மிகவும் மோசமாகவும் ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்டதாகவும் அவர்கள் சாடினர்.
அவர்கள் தொடர்ந்து பேசுகையில், "நாங்கள் நாட்டிற்காகப் பல பதக்கங்களை வென்றுள்ளோம். இருப்பினும், எங்களைக் கண்ணியமாக நடத்தவில்லை. நாங்கள் மோசமாக நடத்தப்பட்டோம். இதன் காரணமாகவே எங்கள் பதக்கங்களைக் கங்கையில் விட முடிவு செய்தோம். இருப்பினும், அப்போது விவசாயச் சங்கத்தினர் வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தி எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.
மன அழுத்தம்: நாங்கள் அன்று பதக்கங்களைக் கங்கையில் விட்டிருந்தால் மிகப் பெரிய வன்முறை கூட நடந்திருக்கலாம். நாங்கள் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறோம். நாங்கள் வாழ்நாள் முழுக்க மல்யுத்தம் செய்தவர்கள். எங்களுக்கு இதையெல்லாம் எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, யார் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. நாங்கள் பலரைச் சந்தித்தோம் ஆனால் யாரை நம்புவது என்று தெரியவில்லை. உள்துறை அமைச்சரைச் சந்தித்ததால் தீர்வு கிடைக்கும் என்றார்கள். இதன் காரணமாகவே அவரை சந்தித்து முறையிட்டோம். நாங்கள் எதாவது தவறு செய்திருந்தால் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம்
உங்களுக்கு எதாவது அநீதியோ அல்லது அத்துமீறலோ நடந்தால் அப்போதே குரல் கொடுங்கள். ஒற்றுமையாக இருந்து குரல் கொடுங்கள்.. அப்போது தான் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்" என்றனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications