"பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்.." தெளிவாக சொன்ன அமெரிக்க வெள்ளை மாளிகை.. என்ன விஷயம் தெரியுமா
உக்ரைன் போர் ஓராண்டை நெருக்கும் நிலையில், வெள்ளை மாளிகை சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது
டெல்லி: உக்ரைன் போர் ஓராண்டாகத் தொடரும் நிலையில், இதில் பிரதமர் மோடியால் போரை நிறுத்த முடியுமா என்ற கேள்விக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் முக்கிய பதிலை அளித்துள்ளார்.
உக்ரைன் போர் முடியாமல் தொடரும் தொடர் கதையைத் தொடர்ந்து கொண்டே இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த உக்ரைன் போர் காரணமாக இரு நாடுகள் மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச பொருளாதாரமே ஆட்டம் காணும் இந்தச் சூழலில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன. இருப்பினும், புதின் விடாப்பிடியாக இருப்பதால் உக்ரைனில் போர் தொடர்ந்து நடந்தே வருகிறது.

பிரதமர் மோடி
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடி கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களிடம் பேசியுள்ளார். இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் குறிப்பிட்டிருந்தார்.. அமெரிக்கா ஊடகங்களும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முயற்சியைப் பாராட்டியிருந்தன. இதற்கிடையே உக்ரைன் போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அமெரிக்கா வரவேற்கும் என்று தெரிவித்தார்.

வரவேற்போம்
உக்ரைன் போர் விவகாரத்தை நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தாமதமாகிவிட்டாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜான் கிர்பி, "உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். இவை அனைத்தையும் அமெரிக்கா நிச்சயம் வரவேற்கவே செய்யும்.. போரை நிறுத்த புதினுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். போர் மேலும் தொடராமல் நிறுத்த முடியும்.. போர் எங்களுக்கு முடிவுக்கு வந்தால் போதும்.

காரணம் யார்
உக்ரைனில் மக்கள் மிகவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.. இது அனைத்துக்கும் காரணம் ரஷ்ய அதிபர் புதின்.. அவரால் மட்டுமே இந்த போரை நிறுத்த முடியும்.. ஆனால், போரை நிறுத்துவதற்குப் பதிலாக அவர் தொடர்ச்சியாக உக்ரைனில் இருக்கும் எனர்ஜி உள்கட்டமைப்பை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறார்.. ஒட்டுமொத்த உக்ரைன் நாட்டையும் இருளில் தள்ள வைக்க முயல்கிறார். இதனால் உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெலென்ஸ்கி
இதை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.. எப்போது பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதை அதிபர் ஜெலென்ஸ்கி தான் முடிவு செய்ய வேண்டும். அவரால் மட்டுமே அதை வலிமையான கையால் செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார். உக்ரைன் போர் தொடங்கிய போது பலரும் ஜெலென்ஸ்கியை நாட்டில் இருந்து வெளியேறும்படியே கேட்டுக் கொண்டனர். இருப்பினும், அவர் யாருக்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து அங்கேயே இருந்து வருகிறார். உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நெருங்கும் நிலையில், உலகின் மிகப் பெரிய ராணுவமாகக் கருதப்படும் ரஷ்யாவுக்கு உக்ரைன் இன்னும் தண்ணி காட்டி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி
உக்ரைன் போரை நிறுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பலமுறை இரு நாட்டு அதிபர்களிடமும் பேசியிருந்தார். இந்த நூற்றாண்டு போருக்கான காலம் இல்லை என்பதைப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் குறிப்பிட்டார். இதை அமெரிக்கா, ஐரோப்பியாவும் வரவேற்றிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில், ஜெலென்ஸ்கி பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்பப் பிரதமர் மோடியின் உதவி தேவை என்று கேட்டுக் கொண்டார். அப்போது உக்ரைன் போர் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

உக்ரைன்
உக்ரைன் போர் தொடர் கதையைப் போல ஓராண்டாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் இந்த போர் தொடங்கிய போது, அதிகபட்சம் சில வாரங்களில் போர் முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்தார்கள். இருப்பினும், உக்ரைன் வீரர்கள் ரஷ்ய வீரர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தனர்.. இப்போது ரஷ்யப் போரை வாபஸ் பெற்றால் தோல்வியைத் தழுவியது போல ஆகிவிடும் என்பதாலேயே ரஷ்ய அதிபர் புதின் போரைத் தொடர்ந்து வருகிறார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications