• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எதிர்கால முயற்சி.. தோனி பற்றி அமித் ஷா செய்த அந்த டிவிட்.. வலுக்கும் அரசியல் யூகங்கள்..பிளான் என்ன?

|

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் தோனி, இனி அரசியலில் காலடி எடுத்து வைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

  Dhoni Retirement: கண்கலங்கிய ரசிகர்கள்

  யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி வெளிப்படையாக அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.

  ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார்.

  அதுதான் தோனியின் தமிழ்நாட்டு பாசம்.. இவ்வளவு நாள் சொல்லாம.. இன்னைக்கு சொன்னார் பாருங்க.. செம பின்னணி

  அரசியல் எப்படி

  அரசியல் எப்படி

  இந்த நிலையில் தோனி அரசியலில் சேர வாய்ப்புள்ளது என்று செய்திகள், வதந்திகள் வர தொடங்கி உள்ளது. தோனிக்கு ஏற்கனவே பாஜகவினர் சார்பாக அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. எங்கள் கட்சியில் தோனி சேர்ந்தால் அவரை சேர்த்துக்கொள்வோம் என்று பாஜக சார்பாக சில எம்பிக்கள், முக்கிய உறுப்பினர்கள் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். கம்பீர் போல எங்கள் கட்சியில் சேர்ந்து எம்பி ஆகிவிடுங்கள் என்று பாஜகவினர் சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  பாஜக எப்படி

  பாஜக எப்படி

  ஆனால் இதற்கு தோனி தரப்பில் இருந்து இதுவரை எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை. பல மாதங்களாக தோனி- பாஜக குறித்த விவாதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் தோனியின் ஓய்வை தொடர்ந்து இந்த சந்தேகம் அதிகரித்துள்ளது. பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருவதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

  அமித் ஷா என்ன சொன்னார்

  அமித் ஷா என்ன சொன்னார்

  இந்த நிலையில்தான் பாஜகவின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தோனி தொடர்பாக

  டிவிட் செய்துள்ளார். அதில், தோனி தனது தனித்துவமான கிரிக்கெட் ஸ்டைல் மூலம் மூலம் பல லட்சம் பேரின் மனதை கவனது இருக்கிறார். தேவைப்படும் நேரங்களில் இந்திய கிரிக்கெட்டை வலுப்படுத்த தோனி மேலும் உதவுவார் என்று நம்புகிறேன். அவரின் எதிர்கால திட்டங்களுக்கு என் வாழ்த்துகள்.. உலக கிரிக்கெட் உங்களின் ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும் மஹி.. என்று அமித் ஷா குறிப்பிட்டு இருக்கிறார்.

  புதிய சந்தேகம்

  புதிய சந்தேகம்

  தோனி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில் தற்போது சரியாக அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார் . பொதுவாக அமித் ஷா கிரிக்கெட் வீரர்களுக்கு இப்படி வாழ்த்துவது இல்லை. அமித் ஷாவின் மகன் ஜெ ஷா மேற்பார்வையில்தான் தற்போது பிசிசிஐ இருக்கிறது. இந்த நிலையில் அமித் ஷா தோனி குறித்து டிவிட் செய்திருப்பது புருவங்களை உயர்த்தி உள்ளது.

  முறைகேடு

  முறைகேடு

  இன்னொரு பக்கம் தோனிக்கு எதிராக அம்ரபலி முறைகேடு புகாரும் உள்ளது. அம்ரபலி குரூப்ஸ் நிறுவனம் தற்போது ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கி இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு 10 வருடமாக வீடு கட்டிக்கொடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

  அம்ரபலி நிறுவனம் மூலம் முறைகேடாக தோனிக்கு நெருக்கமான அம்ரபலி மஹி டெவலப்பர்ஸ் நிறுவனம் மற்றும் ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு பணம் சென்றுள்ளதாக புகார் உள்ளது.

  இரண்டு நிறுவனம்

  இரண்டு நிறுவனம்

  இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தோனியின் மனைவி சாக்ஷிதான் இயக்குனர். இதனால் இந்த முறைகேட்டில் தோனிக்கும் தொடர்பு உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் ஆளும் கட்சியில் சிலர் தோனிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.இதை வைத்து தோனியை கட்சிக்குள் இழுக்க பாஜகவினர் தீவிரமாக முயன்று வருகிறார்கள் என்றும் செய்திகள் வருகிறது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Future Plans of MS Dhoni in Tamil: Here are some guess about future plans of Dhoni , and chances are more that he will enter into politics. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் தோனி, இனி அரசியலில் காலடி எடுத்து வைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X