பாஜக வென்றால் அடுத்த நொடி பங்குச்சந்தை உச்சம் தொடும்! அப்போ இந்தியா கூட்டணி வென்றால்? பரபர ரிப்போர்ட்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையை எந்தளவுக்குப் பாதிக்கும்.. இதனால் பங்குச்சந்தை எந்தளவுக்கு உயரும் அல்லது சரியும் என்பது குறித்து யுபிஎஸ் என்ற புரோக்கிங் நிறுவனம் கணிப்பை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு கட்ட தேர்தல் மட்டுமே பாக்கி இருக்கிறது.

இதற்கிடையே யுபிஎஸ் என்ற புரோக்கிங் நிறுவனம் லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பங்குச்சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து சில கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல்: அதில் லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லவே வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி லோக்சபா தேர்தலில் பாஜக வென்றால் அது பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொட வழிவகுக்கும் என யுபிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்.. பங்குச் சந்தை சரிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது கூட்டணி கணக்குகள் இந்திய தேர்தல்களில் மிக முக்கியமான ஒன்றாக இருந்துள்ளதாக யுபிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்றுள்ள நிலையில், அது கூட்டணி ஆட்சிக்கான தேவையைக் குறைத்துள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜக: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக மொத்தம் 303 இடங்களில் வென்று இருந்தது. அதிலும் குறிப்பாக 222 தொகுதிகளில் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. அதேபோல 259 தொகுதிகளில் 5% மேல் அதிக இடங்களில் பாஜக வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேர்தல் முடிவுகள் குறித்து யுபிஎஸ் நிறுவனம் கூறுகையில், "2024 தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கம் தொடரும் என்றே கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இதனால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி தேவையான வாக்குகளைப் பெற முடியாது என்றே கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு வேலை தேர்தல் முடிவுகளால் பங்குச்சந்தை சரிவடைந்தால்.. அது மிடியம் முதல் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தலாம்..
பங்குச்சந்தை என்ன ஆகும்: முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் புதிய அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப தங்களை மாற்ற சில காலம் பிடிக்கும் என்பதால் அது வரை பங்குச்சந்தை சரிவடையும். தேர்தல் காலத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறுகிய காலத்தில் சந்தை சரிவடையக் காரணமாக இருக்கும் என்ற போதிலும்.. சந்தை சரிவடைந்தால் பங்குகளை வாங்க அது சரியான வாய்ப்பாக இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் எனக் கூறப்பட்டுள்ள போதிலும், வாக்குப்பதிவு தொடங்கிய பிறகு வெளியாகும் தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் இருந்து வரும் தகவல்கள், குறையும் வாக்குப்பதிவு, பிராந்திய அரசியல் காரணமாக பாஜக தனது சீட்களை இழக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
பாஜக தனிப்பெரும்பான்மை: பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற்றால் அது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். அரசு நிறுவனங்களை விற்பது. நில மசோதா மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் வரும் என்பதால் இது முதலீட்டாளர்களுக்குச் சாதகமான ஒன்று.. இதுபோன்ற சூழலில் பங்குச் சந்தை அதிகரிக்கும்.
என்டிஏ கூட்டணி: பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்தால் முதலீட்டாளர்கள் சற்று அதிருப்தி அடைவார்கள். கூட்டணி என்றாலே அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டி இருக்கும். இந்த அழுத்தம் சந்தையைப் பாதிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பொருளாதாரம் பாசிட்டிவாகவே இருக்கும். பங்குச்சந்தையில் இது கலவையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தொங்கு நாடாளுமன்றம்: அதேநேரம் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அது நிச்சயமற்ற சூழலை உருவாக்கும். புதிதாக அமையும் அரசு பெரியளவில் சீர்திருத்தங்களைச் செய்ய ஆர்வம் காட்டாது. மேலும், தொழில் துறையினருக்குச் சாதகமான கொள்கை இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதால் பங்குச்சந்தை சரியும்.
இந்தியா கூட்டணி: ஒரு வேளை இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தால் பங்குச்சந்தை சரிவடையும். பாஜகவின் கொள்கைகளில் இருந்து இந்தியா கூட்டணி கொள்கைகள் முழுமையாக மாறும் என்பதால் பங்குச்சந்தைகள் மிகப் பெரியளவில் சரிவை எதிர்கொள்ளும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications