Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடும் அவைகள்! அப்போ பழைய நாடாளுமன்ற கட்டிடம் என்ன ஆகும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புது நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ள நிலையில், பழைய கட்டிடத்திற்கு என்ன நடக்கும். மத்திய அரசு அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.

டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. இத்தனை ஆண்டுகளாக நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் வகையில் பல முக்கிய மசோதாக்கள் இங்கே நிறைவேற்றப்பட்டுள்ளன. பல முக்கிய விவாதங்கள் நடந்துள்ளன.

 What will happen to old Parliament building as session begins in new building today

இந்தியா அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது உட்பட சில வரலாற்று நிகழ்வுகளுக்கு இந்த கட்டிடம் சாட்சியாக இருக்கிறது. இப்படிப் பல முக்கிய நிகழ்வுகள் இருந்தாலும் போதிய இடவசதி இல்லை, நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் கட்டிடம் இல்லை எனப் பல காரணங்களால் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கொரோனா காலத்திலும் கூட இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி தரப்பட்டு கட்டுமானப் பணிகள் படுவேகமாக நடைபெற்றது. சுமார் 60,000 தொழிலாளர்களின் இரண்டு வருட கடும் உழைப்பால் இந்த புதிய கட்டிடம் தயாரானது. இதனைக் கடந்த மே மாதம் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இருப்பினும், மழைக்காலக் கூட்டத்தொடர் பழைய கட்டிடத்திலேயே நடைபெற்றது. இந்தச் சூழலில் தான் மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது. இதன் முதல் நாள் அமர்வு நேற்று பழைய கட்டிடத்தில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் நாளான இன்று முதல் நாடாளுமன்ற நிகழ்வுகள் புதிய கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி: முன்னதாக நேற்றைய தினம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லுக்கும் மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், "புதிய நம்பிக்கையுடன் எம்பிக்கள் புதிய கட்டிடத்திற்குள் நுழைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இன்று முதல் புது கட்டிடத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பழைய கட்டிடத்திற்கு என்ன ஆகும் என்பது பலருக்கும் கேள்வியாக எழலாம்.

பழைய கட்டிடம் என்ன ஆகும்: பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பழைய நாடாளுமன்றக் கட்டிடம், சுதந்திரப் போராட்டத்தை மட்டுமின்றி, அதன் பிறகு கடந்த 77 ஆண்டுகளா இந்தியா அடைந்த வளர்ச்சியையும் இது கண்டுள்ளது.

இந்தக் கட்டிடத்தை என்ன செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இல்லை. இருப்பினும், இந்தக் கட்டிடம் இடிக்கப்படாது என்பது மட்டும் உறுதி. நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்தும் வகையில் இது புதுப்பிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட இருக்கிறது.

மத்திய அரசு பிளான்: கடந்த 2021இல் அப்போதைய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார். நாட்டின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றைத் தாங்கி இருக்கும் தேசிய காப்பகங்கள் இங்கே மாற்றப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதன் ஒரு பகுதியை மத்திய அரசு அருங்காட்சியகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் இரு அவைகளும் கூடும் இந்த புதிய கட்டிடத்தைப் பிரதமர் மோடி கடந்த மே மாதம் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான கட்டிடத்தில் லோக்சபாவில் 888 உறுப்பினர்கள் அமரலாம். ராஜ்யசபாவில் 300 உறுப்பினர்களும் அமரலாம். 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் இந்த 4 மாடிக் கட்டிடம் மூன்று முக்கிய வாயில்களைக் கொண்டுள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+