15 நிமிஷத்தில் 100 கிமீ தூரம் போய்விடும்.. புல்லட் ரயில் சேவை எப்போது தொடங்கும்? ரயில்வே விளக்கம்
டெல்லி: 100 கி.மீ தூரத்தை வெறும் 15 நிமிடங்களில் கடந்துவிடும் தொழில்நுட்பத்துடன் புல்லட் ரயில் தயாராகி வருகிறது. 2027 ஆம் ஆண்டு இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் மிகவும் சிக்கல் நிறைந்தது என்றும் இதனால் இந்த ரயில் சேவை பயன்பாட்டுக்கு வருவதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும் என்றும் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை - அகமதாபாத் இடையே இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை - அகமதாபாத் இடையேயான 508 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 2 மணி நேரம் 7 நிமிடத்தில் செல்லும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் புல்லட் ரயில் சேவைக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சூரத், வதோதரா, அகமதாபாத் உள்ளிட்ட சில ஸ்டேஷன்களில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்லும் வகையில் திட்டம் தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், முழு நடைபாதையும் முடிவடையும் தேதி இன்னும் முடிவாகவில்லை.
இருப்பினும் குஜராத் வழியாக 352 கிமீ பகுதியில் 50 கிமீ பகுதியை முதல்கட்டமாக 2026-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 இல் முழுமையாக திறக்கப்படும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கான டார்கெட் மேலும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது. மாநிலங்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் புல்லட் ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி கேள்வியை முன்வைத்தார்.
தூள் கிளப்புதே.. சீறி வந்த "வந்தே மெட்ரோ ரயில்.." உள்ளே எப்படி இருக்கு பாருங்க.. போட்டோக்கள்! ஆஹா
இதற்கு பதிலளித்த அமைச்சர், புல்லட் ரயில் திட்டம் என்பது மிகவும் சிக்கலான தொழில் நுட்பம் கொண்டது. பல நாடுகள் புல்லட் ரயில் திட்டத்தை முடிக்க 20 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொண்டன” என்றார். மத்திய அமைச்சர் நேரடியாக பதிலளிக்காதது, புல்லட் ரயில் திட்டம் தொடங்கும் காலம் மேலும் தாமதம் ஆகும் என்பதையே சூசகமாக காட்டுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
புல்லட் ரயில் திட்டம் பற்றி மேலும் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் வழித்தட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் கடலுக்கு அடியில் செல்லும் ரயில் வழித்தட கட்டுமானப் பணிகளில், முதல் கட்டமாக தானேயில் கடலுக்கு அடியில் 50 மீட்டா் ஆழத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மிகவும் சிக்கல் நிறைந்தது.
திட்ட வடிவமைப்பை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டியிருக்கிறது. திட்ட வடிவமைப்பு முடிந்து விட்டால் கட்டுமான பணிகள் எந்த வித சிக்கலும் இல்லாமல் விரைந்து முடிக்கப்படும். புல்லட் ரயிலில் 100-150 கிலோ மீட்டர் தூரத்தை 15 முதல் 20 நிமிடங்களில் கடந்து விடலாம். இந்த புல்லட் ரயிலில் சொகுசு வகுப்பு, சாதாரண குளிா்சாதன இருக்கை வசதி என இரண்டு வகுப்புகள் கொண்டதாக இருக்கும்” எனவும் கூறினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications