டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தடுப்பூசிகள் எங்கே?... தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவரா? மோடியைக் கேட்கும் ராகுல்

தடுப்பூசி மேலாண்மையில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, எங்கே தடுப்பூசிகள் என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தடுப்பூசி மேலாண்மையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி, தடுப்பூசிகள் எங்கே #WhereAreVaccines என்ற ஹேஸ்டேக்குடன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிறன்று பிரதமர் மோடி மக்களுக்கு வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். இன்றைய தினமும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அதைக் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, நாட்டில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஏன் வேகப்படுத்தப்படவி்ல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவின் மாபெரும் சாதனை..ஒரே நாளில் 4.50 லட்சம் பேருக்கு வேக்சின்.. தீவிர நடவடிக்கையில் வீணா ஜார்ஜ்கேரளாவின் மாபெரும் சாதனை..ஒரே நாளில் 4.50 லட்சம் பேருக்கு வேக்சின்.. தீவிர நடவடிக்கையில் வீணா ஜார்ஜ்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி


ராகுல் காந்தி இன்றைய தினம் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து, வரைபடங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக நடந்து வருகிறது.
நாட்டில் பெருவாரிய மக்களுக்கு தடுப்பூசி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று ஊடகங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.

2 டோஸ் தடுப்பூசி

2 டோஸ் தடுப்பூசி

கொரோனா 3வது அலையைத் தடுக்க நாட்டில் 60 சதவிகிதம் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் பணி

தடுப்பூசி செலுத்தும் பணி

அதற்கு நாள்தோறும் நாட்டில் 93 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரத்தில் சராசரியாக 36 லட்சம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது ஏறக்குறைய கடந்த ஒருவாரத்தில் நாள்தோறும் 56 லட்சம் டோஸ் தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை

தடுப்பூசி பற்றாக்குறை

24ஆம் தேதி மட்டும் நாட்டில் 23 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, 69 லட்சம் தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கிறது என்று ராகுல் காந்தி பதிவிட்ட வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மனம்

மக்களின் மனம்

தடுப்பூசிகள் எங்கே? #WhereAreVaccines என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக்குடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திருந்தால், தடுப்பூசி செலுத்தும் நிலை இப்படி இருந்திருக்காது என மோடியை சாடியுள்ளார் ராகுல்காந்தி.

English summary
Rahul Gandhi used the hashtag "Where Are Vaccines" to question the government on the inoculation rate.If you understand the mind of the country Such was not the situation of vaccination Rahul Gandhi Tweets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X