ஸ்டாலின் பேசிய அந்த ஸ்ட்ரிக்ட் வார்த்தை! அப்போ வெற்றி உறுதியா? 4ம் தேதி என்னமோ நடக்கப்போகுது போல
சென்னை: ரிசல்ட் வரப்போற நேரத்தில், அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக்கணிப்புகள் சாதகமாக இருந்தாலும், துளிக்கூட அஜாக்கிரதை காட்டாமல் வாக்கு எண்ணிக்கை நாளில் முகவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதைவிட முக்கியமாக, வேறு சில அட்வைஸ்களையும், உத்தரவுகளையும் முதல்வர் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் முடிந்து, இப்போது ஒட்டுமொத்த மாநிலத்தின் பார்வையும் வரும் 4ம் தேதியை நோக்கியே நிலைபெற்றுள்ளது. கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், அன்று முதல் இன்று வரை அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் அட்வைஸ்
குறிப்பாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருப்பது அறிவாலய வட்டாரத்தில் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு முக்கியச் சந்திப்பு தமிழக அரசியலில் உற்று நோக்கப்படுகிறது.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களை நேரில் அழைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார். இதில் துரைமுருகன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி, புதுச்சேரி ஆர்.சிவா வரை பல முக்கிய முகங்கள் பங்கேற்றனர்.
அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள்
இந்தச் சந்திப்பு வெறும் வாழ்த்து பரிமாற்றமாக மட்டும் அமையாமல், தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அடுத்தகட்ட திட்டமிடல்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த முக்கிய பட்டறையாகவே அமைந்திருந்தது.
ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த முதல் விஷயம் "வெற்றி வாய்ப்பு".. தொகுதி வாரியாக நிலவரம் என்ன? களத்தில் வாக்குப்பதிவு சதவீதம் எப்படியிருந்தது? போன்ற விவரங்களை ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தார். கருத்துக்கணிப்புகள் சாதகமாக வந்தாலும், அந்த மிதப்பில் இருந்துவிடாமல் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை முழுமையான கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை வேட்பாளர்களுக்கு அவர் மிகத் தெளிவாக வலியுறுத்தினார்.
ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு
குறிப்பாக, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றவுள்ள Counting Agents அதாவது முகவர்களுக்கு முதல்வர் மிகக் கடுமையான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளாராம். "வெற்றி உறுதி என்ற எண்ணத்தில் ஒரு நிமிடம் கூட அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது" என்பதே அந்த உத்தரவின் சாராம்சம்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முதல் நிமிடம் முதல், வெற்றிச் சான்றிதழ் கையில் கிடைக்கும் வரை முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்படும் போதுதான் அதிக கவனம் தேவை என்பதையும், அதில் சிறு குளறுபடிகள் நடந்தால் கூட உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட வேண்டும் என்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு துளி விஷயம் கூட தப்ப கூடாது
ஒவ்வொரு சுற்றிலும் பதிவாகும் வாக்குகள் சரியாகப் பதிவேற்றப்படுகிறதா, இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் திரையில் காட்டப்படும் எண்களுக்கும் ஒற்றுமை இருக்கிறதா என்பதைத் துல்லியமாகச் சரிபார்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
"நமது பார்வையில் இருந்து ஒரு துளி விஷயம் கூடத் தப்பி விடக்கூடாது" என அவர் தெரிவித்துள்ளது, வாக்கு எண்ணிக்கையில் திமுக எந்த அளவுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
அதுமட்டுமல்ல, தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறாமல் அமைதி காக்க வேண்டும் என்றும், நிர்வாகிகளுக்குக் கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுகவின் இந்தத் தீவிரக் கண்காணிப்புத் திட்டம், தேர்தல் களத்தில் ஒரு சிறிய மாற்றத்தையும் அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தையே வெளிப்படுத்துகிறது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ரவிக்குமார் என்ன இப்படி சொல்லிட்டாரே? அமித்ஷா விசிகவை குறி வைக்கிறாரா? டெல்லிக்கு பறந்த தகவல் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை












Click it and Unblock the Notifications