சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி மீனா கண்டுபிடித்த உண்மை.. வெளுத்து வாங்கிய விஜயா.. முத்து கேட்ட செம கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே ஒன்றாம் தேதிக்கான எபிசோடில், ஜெயிலிலிருந்து மனோஜ் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனால் தனக்கு உதவி செய்த ரோகிணி பற்றி மனோஜ் சொன்ன விஷயங்களை கேட்டு விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறக்கடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial May 1 Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சிந்தாமணி பைனான்சியருக்கு போன் செய்து ரோகிணி ஐந்து லட்சம் பணம் கொண்டுட்டு வந்திருக்க, அவகிட்ட இன்னும் கூட பணம் பிறகு வாங்கிக்கலாம். ஆனா இப்போ ரோகிணிக்காக மனோஜ் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று போலீஸ் ஸ்டேஷன் என்று போய் சொல்லு என்று சொன்னதும் பைனான்ஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.
மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அப்போது ரோகிணி ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அதை பார்த்ததும் இருவருக்கும் சந்தேகம் வருகிறது. என்ன நடக்கிறது என்று இருவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பைனான்சியர் வந்து ரோகிணிக்காக தான் மனோஜ் மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதாக சொல்கிறார்.

சந்தோஷத்தில் ரோகிணி
அதோடு ரோகிணி பற்றி பெருமையாக பேச, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. நாம ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி இந்த ரோகிணி தான் ஏதோ பிளான் பண்ணி மனோஜ் மேல பைனான்ஸியரை கம்ப்ளைன்ட் கொடுக்க வைத்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறார். பிறகு மனோஜை வெளியே விடுகின்றனர்.
ஸ்டேஷனுக்கு வெளியே வந்த மனோஜ் ரோகிணிடம் நன்றி சொல்கிறார். அதற்கு ரோகிணி எனக்கு எப்போதுமே உன் மேல பாசம் இருக்கு, உனக்காக நான் எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்குவேன். ஆனா உன்னை மட்டும் யாருக்காக விட்டுக் கொடுக்க மாட்டேன், நீ கஷ்டப்பட்டால் என்னால தாங்க முடியாது என்று செண்டிமெண்டாக பேச அதை பார்த்து மனோஜும் ஃபீல் பண்ணுகிறார்.

மீனா கேட்ட கேள்வி
அப்போதும் முத்துவும் மீனாவும் வந்து, நீ இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் கூட ரோகிணி தான் அதை முதலில் ஞாபகம் வச்சிக்கோ என்று மனோஜை வார்ன் பண்ணுகின்றனர். பிறகு மனோஜ் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். அதை பார்த்ததும் விஜயா மனோஜிக்கு ஆரத்தி எடுக்கிறார்.
இதை எல்லாம் பார்த்து அண்ணாமலை கடுப்பாகி கொண்டிருக்கிறார். பிறகு மனோஜ் இப்பதான் நான் யாரு நல்லவங்கன்னு புரிஞ்சுகிட்டேன். நீங்க இவ்வளவு பேரும் இருந்தும், என்னை வெளியே எடுக்க எந்த முயற்சியும் பண்ணல... ஆனா ரோகிணி தான் என்னை வெளியே கொண்டுட்டு வர வச்சிருக்கா.. அவ எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா என்று ஃபீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.

முத்து சொன்ன வார்த்தை
அப்போது முத்து கடுப்பாகி நாங்க உன்னை வெளியே கொண்டு வருவதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தோம் தெரியுமா? மீனா சிந்தாமணி வீட்டுக்கு போய் அவளை மிரட்டி விட்டு வந்திருக்கிறார். அதோடு சிந்தாமணி அதிகமாக வட்டிக்கு கொடுத்தாங்கனு அவ மேல கம்ப்ளைன்ட் கொடுக்க கூட லெட்டர் எழுதி வாங்கி இருக்கிறா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கோபத்தில் விஜயா
ஆனாலும் மனோஜ் நீங்க என்ன பண்ணினாலும் என்ன வெளியே எடுக்க உங்களால முடியல. ரோகிணி தான் அஞ்சு லட்சம் கடன் வாங்கி அந்த பைனான்ஸியருக்கு கொடுத்து இருக்கா என்று பெருமையாக சொல்லிக்கொண்டே இருக்க, அதை பார்த்து கடுப்பான விஜயா மனோஜை போட்டு அடிக்கிறார். அதோடு நீ அவ போடுற நாடகத்தை நம்பி அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு பார்த்தா அது கனவில் கூட நடக்காது என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications