ஷாக்! கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்கள்! தமிழகத்துக்கு 6வது இடம்! இவ்வளவு பேரா? அடடா
டெல்லி: இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு 6வது இடத்தில் இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், அவர்கள் மீது உள்ள வழக்குகள், அவர்களின் கல்வி தகுதிகள் உள்ளிட்ட விபரங்களை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வழங்கி வருகிறது.

மேலும் நாட்டில் உள்ள எம்பிக்கள், எம்எல்எல்கள் தொடர்பாக பல்வேறு விபரங்களை இந்த சங்கம் வெளியிட்டு வருகிறது. இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவல்களும் தேர்தல் சமயத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்கள் அடிப்படையில் தான் இருக்கும்.
அந்த வகையில் தான் தற்போது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காட்சி அமைப்புடன் சேர்ந்து புதிய ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களில் மொத்தம் எவ்வளவு பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்பது பற்றிய தகவல்களை சேகரிக்கப்பட்டன. தற்போது இந்த ஆய்வின் முடிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் மொத்தம் 4,033 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் 4,001 பேரின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் 44 சதவீதம் எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இவர்களில் 1,136 எம்எல்ஏக்கள் அதாது 28 சதவீதம் பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தில், பெண்களுக்குஎதிரான குற்றங்கள் நிலுவையில் உள்ளது.
மாநிலம் வாரியாக பார்த்தால் கேரளாவில் உள்ள எம்எல்ஏக்கள் மீது தான் அதிக கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளாவில் மொத்தம் 135 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் 95 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது அந்த மாநிலத்தின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 70 சதவீதமாகும்.
இதற்கு அடுத்தப்படியாக பீகார் மாநிலத்தில் உள்ள 242 எம்எல்ஏக்களில் 161 பேர் மீது (67 சதவீதம்) கிரிமினல் வழக்கு உள்ளது. டெல்லியில் 70 எம்எல்ஏக்களில் 44 பேர் (63 சதவீதம்) மீதும், மகாராஷ்டிராவில் 284 எம்எல்ஏக்களில் 175 பேர் (62 சதவீதம்) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 118 எம்எல்ஏக்களில் 72 பேர் (61 சதவீதம்) மீதும், தமிழகத்தில் 234 எம்எல்ஏக்களில் 134 பேர் (60 சதவீதம்) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதன்படி பார்த்தால் இந்தியாவில் கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்எல்ஏக்களின் பட்டியலில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications