Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போட்டியே இல்லை.. பாஜக நிறுத்தினால் வெற்றி உறுதி- துணை குடியரசுத் தலைவர் ரேஸில் யார் யார்? அட இவருமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரே உறுதியாக வெற்றி பெறுவார் எனும் நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார் என்பதில் பெரும் போட்டியே நிலவுகிறது.

இந்த ரேஸில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இருக்கின்றனர்.

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்துவரும் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி உறுதி

வெற்றி உறுதி

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மற்றும் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்.பிக்களில் 388 எம்.பிக்கள் வாக்களித்தால் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பாஜக கூட்டணி வசம் 395 எம்.பிக்கள் இருப்பதால், பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளர் வெற்றி உறுதியாகி உள்ளது.

வெங்கையா நாயுடுக்கு மீண்டும்?

வெங்கையா நாயுடுக்கு மீண்டும்?

குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜக சார்பில் இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக விரும்பினார். ஆனால், பல்வேறு எதிர்கால நோக்கங்கள் கருதி திரௌபதி முர்முவுக்கு வாய்ப்பு கொடுத்தது பாஜக. இந்நிலையில், துணை குடியரசு தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கே வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இனி வெங்கையா நாயுடுவுக்கு பாஜக அரசியலில் பெரிய எதிர்காலம் இல்லை என்பதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முக்தார் அப்பாஸ் நக்வி

முக்தார் அப்பாஸ் நக்வி

பா.ஜ.கவைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பெயரும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. முக்தார் அப்பாஸ் நக்வி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பரிசீலனையிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் இஸ்லாமியர் ஒருவரை துணை குடியரசுத் தலைவர் ஆக்குவது சிறந்த முடிவு என பாஜக மேலிடம் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சிவராஜ் சிங் சவுகான்

சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெயரும் பாஜக மேலிடத்தின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கட்சியை வளர்க்கும் வகையில், இளைஞர்களை முதல்வராக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது பாஜக. அதன்படி, நான்காவது முறையாக பதவியில் இருக்கும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் பதவியும் பறிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதனால், அவருக்கு துணை குடியரசுத் தலைவர் வாய்ப்பு அளிக்கப்படலாம் என பேச்சுகள் அடிபடுகின்றன.

 குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு காங். சார்பில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்படாத நிலையில், அவர் அதிருப்தியில் இருந்து வருவதால் சோனியா காந்தி அழைத்துப் பேசி, காங்கிரஸில் நம்பர் 2 இடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். ஆனால், அதை மறுத்துவிட்டார் ஆசாத். அவருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

அமரீந்தர் சிங்

அமரீந்தர் சிங்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் நிறுத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதுக்கட்சியை நடத்தி வருகிறார். அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தார்.

 பாஜக சார்பில் வாய்ப்பு

பாஜக சார்பில் வாய்ப்பு

உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ள அமரீந்தர் சிங் சமீபத்தில் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன் காரணமாக வேகமாக அரசியல் பணி ஆற்றுவதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப்பின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர் தற்போது பாஜகவுடன் இணக்கமாக இருப்பதால் அவர் தனது கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டு, பாஜக சார்பில் வேட்பாளராக நிற்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+