இந்திய பணக்காரர்கள் பட்டியல்.. வழக்கம் போல அம்பானி, அதானி டாப்.. லிஸ்டில் ஒரே தமிழர்! யார்னு பாருங்க
டெல்லி: ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் பணக்காரர் லிஸ்டில் அம்பானி, அதானி டாப் இடங்களில் உள்ள நிலையில், லிஸ்டில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.
அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டு இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் அதானி, லட்சுமி மிட்டல், உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள போதிலும், இதில் வழக்கம் போல டாப் இடத்தை முகேஷ் அம்பானி தான் பிடித்துள்ளார்.
அம்பானி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 112 பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ள நிலையில், அம்பானி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அம்பானி இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலும் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார். அதேநேரம் சர்வதேச அளவில் பார்க்கும் போது அவர் 11ஆவது இடத்தில் இருக்கிறார்.
இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் கவுதம் அதானி இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 79 பில்லியன் டாலராக இருக்கிறது. அதாவது இந்தியா மதிப்பில் சுமார் 6.5 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்தியாவில் மிக வேகமாக வளரும் கார்பரேட் நிறுவனங்களில் ஒன்றாக அதானி இருக்கிறது. அதானி குழுமம் லாஜிஸ்டிக்ஸ், எனர்ஜி என பல நிறுவனங்களில் நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே தமிழர்: இதில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஹெச்.சி.எல். நிறுவனருமான ஷிவ் நாடார் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 34.9 பில்லியன் டாலர், அதாவது 2.9 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்காவது இடத்தில் சவித்ரி தேவி ஜிண்டால் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 29.4 பில்லியன் டாலார் ஆகும். இதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய பெண் கோடீஸ்வரர் என்ற பெருமையை சவித்ரி தேவி ஜிண்டால் பெற்றுள்ளார். சாவித்ரி தேவி ஜிண்டால் ஓ.பி. ஜிண்டால் க்ரூப்பின் தலைவர் ஆவார்.
இதில் அடுத்த இடத்தில் இந்திய மருத்துவத் துறையில் முக்கிய இடத்தில் இருக்கும் சைரஸ் பூனவல்லா இருக்கிறார். சைரஸ் பூனவல்லா குழுமத்தின் சேர்மேனாக இருக்கும் இவரது சொத்து மதிப்பு 25.2 பில்லியன் டாலர் ஆகும். இவரது சீரம் நிறுவனம் தான் உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. கொரோனா சமயத்தில் இவர்களின் கோவாக்சின் தடுப்பூசி தான் பலருக்கும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தான் டாப் 5 இடங்களில் உள்ளனர்.
அடுத்தடுத்து யார்: அடுத்த இடத்தில் மற்றொரு புகழ்பெற்ற மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல் நிறுவனர் திலிப் சங்கவி இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 24.4 மில்லின் டாலராக இருக்கிறது. நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும் வகையில் கடந்த 2016இல் மத்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு பாரம்பரிய கோடீஸ்வர குடும்பமான பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த குமார் மங்கலம் பிர்லா 19.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7ஆவது இடத்திலும் இந்திய ரியல் எஸ்டேட் ஜாம்பவானான கேபி சிங் 12.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8ஆவது இடத்திலும் உள்ளனர். அடுத்து லட்சுமி மிட்டல் (16.7 பில்லியன் டாலர்), ராதாகிருஷ்ணன் தாமணி (16.4 பில்லியன் டாலர்) உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
-
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications