"மோடி vs மன்மோகன் சிங்.." இந்திய பொருளாதாரம் உண்மையில் யார் ஆட்சியில் சிறப்பாக இருந்தது.. பரபர சர்வே
டெல்லி: இந்திய பொருளாதாரத்தை யார் சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதற்கு மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது குறித்த புது சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக விவாதங்கள் நடந்தன. முந்தைய அரசு பொருளாதாரத்தை எப்படிக் கையாண்டது என்பது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதேபோல எதிர்க்கட்சிகளும் அதற்குப் பதிலடியாகக் கறுப்பு அறிக்கையை வெளியிட்டன.

இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே லோக்சபா தேர்தல் தொடர்பான சர்வே ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் மாநிலம் வாரியாக லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லப்பட்டு இருந்தது.
மோடி vs மன்மோகன் சிங்: அதேபோல பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரில் இந்தியப் பொருளாதாரத்தை யார் சிறப்பாகக் கையாண்டார்கள் என்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டு இருந்தது. அதில் 46.6% பேர் மோடி தான் இந்தியப் பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல 41.1% பேர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தைச் சரியாகக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டாகவே பொருளாதாரத்தை யார் சிறப்பாகக் கையாண்டார் என்பதில் மோடிக்குத் தான் அதிக ஆதரவு இருந்துள்ளது. கடந்த 2023 ஜன. மாதம் இதே கேள்விக்கு 51% பேர் மோடி என்றும் 36% பேர் மட்டுமே மன்மோகன் சிங் என்றும் கூறியிருந்தனர். ஆனால், கடந்த ஆக. மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் மோடி சிறப்பாகப் பொருளாதாரத்தைக் கையாண்டதாக 44% பேர் மக்கள் மட்டுமே தெரிவித்தனர். அதேநேரம் மன்மோகன் சிங் என்று 42% பேர் சொன்னார்கள்.
வேலைவாய்ப்புகள்: அதேநேரம் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்த மற்ற கேள்விகளில் கலவையான பதிலே கிடைத்துள்ளது. மோடி அரசு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு 32% பேர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 25% பேர் ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் 31% பேர் வேலைவாய்ப்பில் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறியுள்ளனர்.
வேலையின்மை இப்போது நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்ற கேள்விக்குக் குறைந்தது 54 சதவீதம் பேர் மிகவும் தீவிரமானதாக இருப்பதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 17 சதவீதம் பேர் இது ஓரளவு தீவிரமானதாக இருப்பதாகவும் 4 சதவீதம் பேர் மட்டுமே வேலையின்மை பிரச்சினை மோசமாக இல்லை என்று கூறியுள்ளனர்.
"நாட்டின் பெஸ்ட் முதல்வர்கள்.." டாப் இடத்தில் யோகி.. 2ஆம் இடத்தில் கெஜ்ரிவால்! அப்போ ஸ்டாலின் எங்கே
ஏழை மற்றும் பணக்காரர்கள்: மோடி அரசின் கொள்கைகள் நாட்டில் உள்ள ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையேயான வேறுபாடுகள் அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு 45 சதவீதம் பேர் ஆம் எனத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 37 சதவீதம் பேர் ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையேயான வேறுபாடுகள் அதிகரிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
மோடி அரசின் கொள்கைகளால் பலனடைந்தது யார் என்பது குறித்த கேள்விக்கு 52 சதவீதம் பேர் பெரு நிறுவனங்களே அதிகம் பலனடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 11 சதவீதம் பேர் சிறு தொழில்கள் அதிகம் பலனடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 9 சதவீதம் பேர் விவசாயிகள் அதிகம் பயனடைந்ததாகவும் 8 சதவீதம் பேர் மாத சம்பளம் பெறுவோர் பயனடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சர்வேயில் 62% பேர் செலவுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.. 33% பேர் மட்டுமே செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அது பெரியளவில் பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் அடுத்த 6 மாதங்களில் எங்கே இருக்கும் என்ற கேள்விக்கு 34% பேர் மேலும் நல்ல நிலைக்குச் செல்லும் எனப் பதிலளித்துள்ளனர். 27% பேர் அதே நிலையில் இருக்கும் என்றும் 29% பேர் மேலும் மோசமடையலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications