அப்படியே ஜாக்குலின் மாதிரி அழகு.. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அமெண்டா செர்னி! யார் இவர்?
டெல்லி: இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள சமீபத்திய மற்றொரு வெளிநாட்டு பிரபலம்தான் அமெரிக்க நடிகை அமெண்டா செர்னி.
அமெண்டா செர்னிக்கு, யூடியூப்பில் 2.8 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள், இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். இவருக்கும் இந்தியாவுக்கும் நீண்ட கால தொடர்பு இருக்கிறது.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரிஹானா சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்தார்.

பிரபலங்கள்
இதைத் தொடர்ந்து ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் சகோதரி மகள் மீனா ஹாரிஸ், நடிகை மியா கலிஃபா, உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்காவின் பிரபல பாடகி ரெஹானாவின் ஆதரவை அடுத்து ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டனும் தனது ஆதரவை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏன் போராடுகிறார்கள்
ஸ்பீட் ரேசர், தி மெடலர், ஏ பேட் மாம்ஸ் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் மூத்த நடிகையும் சமூக ஆர்வலருமான
சூசன் சரண்டன் (74), தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை ஷேர் செய்தார்.

இன்ஸ்டாகிராம்
மற்றொரு அமெரிக்க நடிகையான அமெண்டா செர்னி விவசாயிகளுக்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், 'டெல்லி விவசாயிகள் போராட்டத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரச்சனையை புரிந்துக் கொள்ள நீங்கள் இந்தியராகவோ, பஞ்சாபியாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனிதநேயம் இருந்தாலே போதும். அனைவருக்கும் பேச்சு சுந்திரம் உள்ளது. அனைவரும் கருத்து தெரிவிக்கலாம்' என்று அமெண்டா செர்னி தெரிவித்தார்.
|
சிறுமியுடன் ஒப்பந்தம்
இதையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் பலரும் இவரது இன்ஸ்டாகிராம் பதிவு பின்னூட்டத்திற்குச் சென்று, பணம் வாங்கிக் கொண்டு இப்படி ட்வீட் போடுவதாக விமர்சனம் செய்தனர். இந்த ட்ரோலிங்கிற்கு பதிலளிக்கும் விதமாக, கிண்டல் பதிவு ஒன்றை செர்னி உருவாக்கியுள்ளார். அதில் தனது 10 வயது சொந்தக்கார சிறுமியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியதை போல ஒரு போட்டோ ஷேர் செய்துளார். "அடிப்படை மனித உரிமைகளின் தேவையை ஆதரித்து நிறைய ட்வீட்களை உருவாக்கவும், தயாரிக்கவும் வெளியிடவும் செர்னிக்கு 100 டாலர் கிடைக்கும்" என்று கூறியுள்ளார். அதாவது 10 வயது சிறுமி பணம் தருவதாக கூறியதால் தான் இவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவாக போஸ்ட் போட்டதாக கிண்டல் செய்துள்ளார்.

அமெரிக்கா பிரபலம்
29 வயதான செர்னி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிட்ஸ்பர்க்கில் பிறந்தவராகும். வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான 'ஜீயஸின்' நிறுவனர் இவர். 3,000 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் மற்றும் இசை வீடியோக்களை உருவாக்கி இயக்கியுள்ளார். செர்னி ஒரு மாடல், நடிகை, உடல்நலம் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர் மற்றும் கன்டென்ட் உருவாக்குனர் ஆகும். அவர் 2019 முதல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு தூதராக இருந்து வருகிறார்.

இந்தியாவுடன் தொடர்பு
இந்தியாவுடனான அவரது தொடர்பானது 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது. பிரபலமான இந்திய யூடியூபர் புவன் பாம் உடன் அவர் கூட்டு வைத்துக் கொண்டிருந்தார். ராஜ் கபூர் நடித்த ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை (1960) திரைப்படத்தின் 'பிரபோசல் காட்சியை' மறு உருவாக்கம் செய்ய இருவரும் இணைந்து செயல்பட்டனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மாதிரி
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும், செர்னியும் ஒரே மாதிரி உருவ ஒற்றுமையுடன் அழகாக இருப்பதாக பல ரசிகர்கள் கூறுவது வாடிக்கை. இந்த நிலையில்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2018 இல் செர்னியைச் சந்தித்தார், அவருடன் ஒரு படத்தை கூட வெளியிட்டார். இருவரும் சேர்ந்து 2020 ஆம் ஆண்டில் 'ஃபீல்ஸ் குட்' என்ற தலைப்பில் ஒரு போட்காஸ்டை தொகுத்து வழங்கினர். நடிகர் சைஃப் அலிகான் அதன் முதல் எபிசோடில் நடித்தார். 2019 ஆம் ஆண்டில், செர்னி இந்தியாவுக்கு வருகை தந்தார். மும்பையில் நடந்த யூடியூப் விழாவில் பங்கேற்றார். இந்தி பாடல்களுக்கு நடனமாடினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications